/* */

தொடர் சரிவிலிருந்து மீண்ட பங்கு சந்தை

கடந்த வாரம் சரிவை சந்தித்த இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 237 புள்ளிகள் உயர்ந்தது.

HIGHLIGHTS

தொடர் சரிவிலிருந்து மீண்ட பங்கு சந்தை
X

கடந்த வாரம் முழுவதும் சரிவை சந்தித்த பங்கு வர்த்தகம் இன்று ஏற்றம் கண்டது. இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. இருப்பினும் பின்னர் பங்கு வர்த்தகத்தில் இறக்க, ஏற்றம் நிலவியது. இறுதியில் பங்கு வர்த்தகம் உயர்வுடன் முடிவடைந்தது.

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், இந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் எச்.டி.எப்.சி. நிறுவனம் உள்பட மொத்தம் 17 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், டாடா ஸ்டீல் மற்றும் இண்டஸ்இந்த் வங்கி உள்பட மொத்தம் 13 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 693 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 2,721 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 164 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.235.00 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.1.77 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 237.42 புள்ளிகள் உயர்ந்து 51,597.84 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 56.65 புள்ளிகள் உயர்ந்து 15,350.15 புள்ளிகளில் முடிவடைந்தது.

Updated On: 20 Jun 2022 11:19 AM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  2. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  3. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  5. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  6. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  7. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  8. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  9. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  10. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!