சேமிப்பு திட்டங்கள், வங்கி ஃபிக்சட் டெபாசிட் : எதில் அதிக வருமானம்?
பல வங்கிகள் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தின் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளதால், அவை முன்பை விட அதிக வருவாய் கிடைக்க வழிவகுக்கிறது. அதேபோல், சிறுசேமிப்பு திட்டங்களும் தொடர்ந்து கவர்ச்சிகரமான வெகுமதிகளை வழங்குகின்றன. பிபிஎப், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டங்கள், தேசிய சேமிப்புச் சான்றிதழ்கள் மற்றும் சுகன்யா சம்ரித்தி கணக்குத் திட்டம் உள்ளிட்ட சிறு சேமிப்புத் திட்டங்கள் முதலீடு செய்யப்படும் காலத்தை பொறுத்து 4% முதல் 8.1 சதவீதம் வரை வருமானத்தை அளிக்கின்றன.
சிறு சேமிப்புத் திட்டங்கள் என்பது அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் சேமிப்பு திட்டங்கள். அவை, மக்கள் தொடர்ந்து சேமிக்க ஊக்கமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்கள், 1-3 வருடம் டைம் டெபாசிட், 5 ஆண்டு ரெக்கரிங் டெபாசிட் என பல விருப்பங்கள் உள்ளன. தேசிய சேமிப்புச் சான்றிதழ்கள் மற்றும் கிசான் விகாஸ் பத்ரா போன்ற சேமிப்புச் சான்றிதழ்களும் இதில் அடங்கும்.
இதுதவிர, பொது வருங்கால வைப்பு நிதி, சுகன்யா சம்ரித்தி கணக்கு மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் ஆகியவையும் அடங்கும். இந்தத் திட்டங்கள் மாதாந்திர வருமானக் கணக்கிற்கும் பொருந்தும்.
தற்போதைய வட்டி விகிதங்கள்
ஏப்ரல்-ஜூன் காலாண்டில், அரசாங்கம் சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களை நிலையானதாக வைத்துள்ளது. சிறு சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதங்கள் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் மதிப்பாய்வு செய்யப்படும். பல்வேறு சிறு சேமிப்புக் திட்டங்களின் தற்போதைய வட்டி விகிதம்.
- போஸ்ட் ஆபீஸ் சேமிப்புக் திட்டத்தின் வட்டி விகிதம் ஆண்டுக்கு 4 சதவீதம் ஆகும்
1 முதல் மூன்று ஆண்டுகள் வரையிலான டைம் டெபாசிட் திட்டம், ஆண்டுக்கு 5.5 சதவீதம் வட்டி வழங்குகிறது.
ஐந்தாண்டு டைம் டெபாசிட் திட்டம், 6.7 சதவீத வட்டி வழங்குகிறது.
5 ஆண்டு ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தின் வட்டி வகிதம் 5.8 சதவீதமாகும்.
- தேசிய சேமிப்புச் சான்றிதழ்கள் மற்றும் கிசான் விகாஸ் பத்ராவின் சேமிப்பு திட்டங்கள் முறையே 6.8% மற்றும் 6.9% வட்டி விகிதங்கள் வழங்குகின்றன.
- பொது வருங்கால வைப்பு நிதி, சுகன்யா சம்ரித்தி கணக்கு மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் ஆகியவற்றின் வட்டி விகிதம் முறையே 7.1 சதவீதம், 7.6 சதவீதம் மற்றும் 7.4 சதவீதம் ஆகும்.
- சுகன்யா சம்ரித்தி கணக்கை, பத்து வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் தொடங்கலாம். சுமார் 21 ஆண்டு காலம் டெபாசிட் செய்யும் இந்த திட்டத்தில் அதிகப்பட்சமாக ஆண்டிற்கு ரூ1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்திற்கு 80C பிரிவின் கீழ் வரி விலக்கும் கிடைக்கிறது. இதன் வட்டி விகிதம் ஆண்டுக்கு 6.6 சதவீதம் ஆகும்.
ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்கள்:
ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்கள், சமீபத்தில் HDFC வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் கோட்டக் மஹிந்திரா வங்கி ஆகியவற்றால் பல்வேறு காலங்கள் மற்றும் டெபாசிட் தொகைகளுக்கு உயர்த்தப்பட்டுள்ளன.
HDFC வங்கி தற்போது ரூ. 2 கோடிக்கு கீழ் உள்ள ஃபிக்சட் டெபாசிட்களுக்கு 5.1 முதல் 5.6 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. பெண்கள், வயதானவர்கள் என ஒவ்வொரு பிரிவினருக்கு ஏற்றப்படி பல்வேறு வட்டி விகிதங்கள் வழங்கப்படுகின்றன.
ஆக்சிஸ் வங்கி தற்போது ரூ.2 கோடிக்கு மேல் உள்ள டெபாசிட்டுகளுக்கு 4.45-4.65 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu