டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்வு

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்வு
X
உள்நாட்டு பங்குகளின் உயர்வால் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 18 காசுகள் உயர்ந்தது.

உள்நாட்டு பங்குகளின் உயர்வால் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 18 காசுகள் உயர்ந்தது.

ரிசர்வ் வங்கி நாணயக் கொள்கை கூட்டத்தின் முடிவு வெள்ளியன்று அறிவிக்கப்படவுள்ளது. அதனால் சந்தையாளர்கள் விழிப்புடன் இருந்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இண்டர்பேங்க் அந்நிய செலாவணி சந்தையில், ரூபாயின் மதிப்பு 73.17 என தொடங்கி நாளின் அதிகபட்சமாக 72.90 ஆக உயர்ந்து இறுதியாக 72.91 இல் முடிவடைந்தது. புதனன்று அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 73.09 ஆக இருந்தது.

உலகளாவிய எண்ணெய் அளவுகோலான ப்ரெண்ட் க்ரூட் 0.17 சதவீதம் உயர்ந்து 71.47 அமெரிக்க டாலராக உள்ளது.

உள்நாட்டு பங்குச் சந்தையில், மும்பை பங்குச்சந்தை (0.74%) 382.95 புள்ளிகள் அதிகரித்து 52,232.43 புள்ளியில் முடிவடைந்தது. நிஃப்டி 114.15 (0.73%) புள்ளிகள் அதிகரித்து 15,690.35 புள்ளிகளாக உள்ளது.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு