8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் 7.79% ஆக உயர்வு

8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம்  7.79% ஆக உயர்வு
X
பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 7.79 சதவீதமாக உயர்ந்துள்ளது. மார்ச் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6.95 சதவீதமாக இருந்தது.

இந்தியாவின் சில்லறை பணவீக்கம் ஆண்டு அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்க குறியீடானது, 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு 7.79 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் இந்த நுகர்வோர் விலை குறியீடானது 6.95 சதவீதமாக இருந்தது. இதே பிப்ரவரியில் 6.07 சதவீதமாகவும் இருந்தது. ஜனவரி மாதத்தில் 6. 1 சதவீதமாகவும் இருந்தது. இந்த நிலையில் தான் ஏப்ரல் மாதத்தில் 18 மாதத்தில் 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு 7.79 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. இதே கடந்த ஆண்டு ஏப்ரல் 2021ல் 4.23 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சில்லறை பணவீக்க விகிதம்

  • இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6.95 சதவீதமாக இருந்தது. இது ஏப்ரல் 2021 இல் 4.23 சதவீதமாக இருந்தது.
  • நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) மூலம் கண்காணிக்கப்படும் சில்லறை பணவீக்கம் சில்லறை வாங்குபவரின் பார்வையில் விலைகளில் ஏற்படும் மாற்றங்களை அளவிடுகிறது.
  • உணவுப் பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 7.68 சதவீதத்திலிருந்து 8.38 சதவீதமாக உயர்ந்துள்ளது.
  • பணவீக்கம் இருபக்கமும் 2 சதவீதம் என்ற விகிதத்தில் 4 சதவீதமாக இருப்பதை உறுதி செய்ய ரிசர்வ் வங்கிக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
  • ஜனவரி 2022 முதல் சில்லறை பணவீக்கம் 6 சதவீதத்திற்கு மேல் உள்ளது.

இதற்கிடையில், தொழில்துறை உற்பத்தி மார்ச் மாதத்தில் 1.9 சதவீதமும், 2021-22 நிதியாண்டில் 11.3 சதவீதமும் வளர்ந்ததாக அரசாங்க தரவுகள் தெரிவிக்கின்றன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!