ரிலையன்ஸ்- டிஸ்னி இணைப்பு: தலைவராகிறார் நீட்டா அம்பானி?

ரிலையன்ஸ்-டிஸ்னி மீடியா ஒப்பந்தம்: இணைக்கப்பட்ட நிறுவனத்தின் தலைவராக நீடா அம்பானியும், துணைத் தலைவராக உதய் சங்கர் பணியாற்றுவார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மற்றும் வால்ட் டிஸ்னி நிறுவனம் இந்தியாவில் தங்கள் ஊடக வணிகங்களை இணைப்பதற்கான ஒப்பந்தத்தில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திட்டுள்ளன. இது 8.5 பில்லியன் டாலர் (ரூ. 70,352 கோடி) ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு அதிகார மையத்தை நிறுவுவதற்கான களத்தை அமைக்கிறது.

கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி, இணைக்கப்பட்ட நிறுவனத்தின் தலைவராக இருப்பார் , அதே நேரத்தில் உதய் சங்கர் துணைத் தலைவராக பணியாற்றுவார் என்று நிறுவனங்கள் கூட்டறிக்கையில் அறிவித்தன.

ரிலையன்ஸ்- வால்ட் டிஸ்னியின் இந்திய டிஜிட்டல் சேவைகள் இணைப்பு நிறுவனத்துக்கு தலைவராக நீட்டா அம்பானி பொறுப்பேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


கடந்த ஆண்டு ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் இருந்து நீட்டா அம்பானி விலகி ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவர் பணியில் தொடர்ந்து வந்தார்.

பாலிவுட் பிரபலங்களோடு அடிக்கடி நிகழ்வுகளில் கலந்து கொள்கிற நீட்டா, மும்பையில் உள்ள கலாச்சார மையத்தின் தலைவராகவும் உள்ளார்.

இந்தியா முழுவதும் ரிலையன்ஸ் மற்றும் டிஸ்னி நிறுவனங்கள் சேர்ந்து 120 டிவி சேனல்களைக் கொண்டுள்ளன. இந்த இணைப்பு மூலம் நாட்டின் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு சந்தையில் தனது பலத்தை ரிலையன்ஸ் அதிகரிக்கவுள்ளது.

ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, Viacom18 இன் ஊடக நிறுவனமானது, நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தின் மூலம் ஸ்டார் இந்தியா பிரைவேட் லிமிடெட் ("SIPL") உடன் இணைக்கப்படும் என்று ரிலையன்ஸ் தொடர்ந்து கூறியது.

இணைப்பு நிறுவனத்தில் ரிலையன்ஸ் 51 முதல் 54 சதவிகிதம் பங்குகளை பெறவுள்ளது.

டிஸ்னி 40 சதவிகிதம் அளவுக்கும் போதி ட்ரீ என்கிற கூட்டு முயற்சி நிறுவனம் 9 சதவிகிதம் பங்குகளையும் வகிக்கும் என ரைட்டர் தெரிவித்துள்ளது.

ரிலையன்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் இணைந்து நிறுவனத்தில் 60 சதவீதத்திற்கும் அதிகமான (பெரும்பான்மை) பங்குகளை வைத்திருக்கும் என்பதை இது குறிக்கிறது.

ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.11,500 கோடி முதலீடு செய்ய ஒப்புக்கொண்டுள்ளது. கூடுதலாக, ஒழுங்குமுறை மற்றும் மூன்றாம் தரப்பு ஒப்புதல்களுக்கு உட்பட்டு, டிஸ்னி சில கூடுதல் மீடியா சொத்துக்களை JVக்கு பங்களிக்கலாம்.

Tags

Next Story
the future of ai in healthcare