'நூர்ஜஹான்' மாம்பழத்தின் விலை ரூ.1000 -முன்பதிவு அவசியமுங்கோ

நூர்ஜஹான் மாம்பழத்தின் விலை ரூ.1000 -முன்பதிவு அவசியமுங்கோ
X

 ‘நூர்ஜஹான்’

மத்திய பிரதேசத்தின் அலிராஜ்பூர் மாவட்டத்தில் பயிரிடப்படும் 'நூர்ஜஹான்' மாம்பழத்தின் விலை ஒன்று ரூ.500 முதல் ரூ.1,000 வரை இருக்குதாம். இந்த முறை இதன் விளைச்சலும் அமோகமாக இருக்குதாம்.

நமக்கு தெரிஞ்சதெல்லாம் சேலத்து மாம்பழம், மல்கோவா மாம்பழம், கள்ளா மாம்பழம், சப்போட்டா மாம்பழம் மற்றும் இதனில் பல வகைகளை கேட்டறிந்திருப்போம். இந்த வகையான மாம்பழங்கள் எளிதாக நாம் ஊர்களில் அந்தந்த சீசனில் கிடைக்கும். இதனின் விலை ரூ.100 வரை இருக்கும். இதெல்லாம் இல்லாம நூர்ஜஹான் என்ற மாம்பழ வகை இருக்குதாம் . இது ஒன்றில் விலை 500 முதல் 1000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இந்தியாவில் மத்திய பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டத்தில் "நூர்ஜஹான்" ரக மாம்பழங்கள் விளைவிக்கப்படுகிறது. இந்த நூர்ஜஹான் ரக மாம்பழம் ஆப்கான் பகுதியை சார்ந்தது. இதுல ஸ்பெஷல் என்னன்னா இந்த ரக மாம்பழ மரம் அலிராஜ்பூர் மாவட்டத்தில் மட்டுமே உள்ளது.

குஜராத் எல்லையை ஒட்டியுள்ள இந்தூரில் இருந்து சுமார் 250 கி.மீ தூரத்தில் அலிராஜ்பூர் மாவட்டத்தின் கட்டிவாடா பகுதியில் மட்டுமே பயிரிடப்படுகிறது. இந்த மரங்கள் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பூக்கத் தொடங்குகிறது. இந்த மாம்பழம் சுமார் 2 கிலோ முதல் 3.5 கிலோ வரை எடை கொண்டது. நூர்ஜஹான் மாம்பழம் ஒரு அடி நீளம் வரை வளரக்கூடியது. இந்தாண்டு இந்த நூர்ஜஹான் மாம்பழத்தின் விளைச்சல் நன்றாக இருக்கிறது என விவசாயிகள் கூறுகின்றனர்.

அதிகப்படியாக இந்த மாம்பழங்கள் குஜராத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நூர்ஜஹான் மாம்பழங்களை முன்கூட்டியே முன்பதிவு செய்து பெற்று செல்கின்றனர். நூர்ஜஹான் மரங்கள் இந்த வருடம் 250 மாம்பழங்களை உற்பத்தி செய்துள்ளன. பழத்தின் விலை ஒன்றுக்கு ரூ. 500 முதல்ரூ. 1,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. முன்பதிவு ஏற்கனவே தொடங்கியுள்ளதாக கதிவாடாவைச் சேர்ந்த மாம்பழ பயிரிடுபவர் சிவ்ராஜ் சிங் தெரிவித்தார்.

Tags

Next Story