நெல்லை-போட்டோ, வீடியோ தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் எம்எல்ஏ விடம் கோரிக்கை மன அளிக்கபட்டது..

நெல்லை-போட்டோ, வீடியோ தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் எம்எல்ஏ விடம் கோரிக்கை மன அளிக்கபட்டது..
X

நெல்லை-போட்டோ, வீடியோ தொழிலாளர்கள் நல சங்கம் 

நெல்லை மாவட்ட போட்டோ அண்ட் வீடியோ ஒளிப்பதிவு தொழிலாளர் நல சங்கத்தின் சார்பாக சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப்பை சந்தித்தனர்.

கொரோனா இரண்டாவது அலையால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுபநிகழ்ச்சிகள் ஏதும் நடைபெறாததால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தற்போது அரசு குறிப்பிட்ட தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து புகைப்பட போட்டோ ஸ்டுடியோ, கலர் லேப், போட்டோ ஸ்டோர்ஸ் மற்றும் போட்டோ வீடியோ, எடிட்டிங் கம்ப்யூட்டர் சென்டர்களை திறப்பது சம்பந்தமாக கோரிக்கை மனுவினை அளித்தனர்.

மேலும் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடமும் இந்த கோரிக்கை மனுவை அளித்தனர்.மனு குறித்து பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் மாவட்ட ஆட்சித் தலைவரிடமும், மாநில அரசிடமும் பேசி நல்ல முடிவை விரைவில் அறிவிப்பதாக போட்டோ வீடியோ சங்கத்தின் தலைவர் சோமசுந்தரம் தெரிவித்தார்.

Next Story
ai solutions for small business