ஜூன் 9 முதல் மதுபான கடைகள் திறக்க அனுமதி – ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு

ஜூன் 9 முதல் மதுபான கடைகள் திறக்க அனுமதி – ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு
X

உத்தரகண்ட் மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதுவரை அம்மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,34,024 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இறப்பு எண்ணிக்கையும் 6000 க்கு அதிகமாக பதிவாகியுள்ளது.

ஜூன் 9 உடன் கட்டுப்பாடுகள் அனைத்தும் முடிவடைய உள்ள நிலையில் ஜூன் 15 வரை அனைத்து கட்டுப்பாடுகளும் நீடிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள். மேலும் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் சில்லறை பொருள்கள் விற்பனை செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் மதுபான கடைகள் வாரத்தில் மூன்று நாட்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஜூன் 9, 11, 14 தேதிகளில் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரையும் மதுபான கடைகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, எழுதுபொருள் மற்றும் புத்தகக் கடைகளும் ஜூன் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் திறக்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!