ரிலையன்ஸ் ஜியோவின் புதிய தலைவராக முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி
உலகின் மாபெரும் கோடீஸ்வரராக திகழும் இந்தியாவின் ரிலையன்ஸ் குழும தலைவரான முகேஷ் அம்பானி அந்நிறுவனத்தின் தொலைத்தொடர்பு சேவை பிரிவான ரிலையன்ஸ் ஜியோ இயக்குநர் பதவியை ராஜினாமா செய்தார்.
இன்று நடைபெற்ற குழு கூட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோவின் தலைவராக முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முன்னதாக, முகேஷ் அம்பானி நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். எனினும், அனைத்து ஜியோ டிஜிட்டல் சேவை பிராண்டுகளுக்கும் சொந்தமான முதன்மை நிறுவனமான ஜியோ பிளாட்பார்ம்ஸ் லிமிடெட்டின் தலைவராக முகேஷ் அம்பானி தொடர்ந்து இருப்பார்.
மேலும், ரிலையன்ஸ் ஜியோவின் நிர்வாக இயக்குநராக பங்கஜ் மோகன் பவாரை ஐந்தாண்டு காலத்திற்கு நியமிப்பதற்கும் இன்று நடைபெற்ற குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ரமிந்தர் சிங் குஜ்ரால் மற்றும் கே.வி. சவுத்ரி, ஆகியோர் நிறுவனத்தின் கூடுதல் இயக்குநர்களாக பொறுப்பேற்றார்கள்.
கடந்த 2017இல் ஜியோ போனைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்துவதில் பொறியாளர்கள் குழுவுடன் ஆகாஷ் அம்பானி நெருக்கமாக ஈடுபட்டார். அதன்பின், ஜியோ போன் பெரும்பாலான இந்தியர்களை 2ஜி சேவையில் இருந்து 4ஜிக்கு அழைத்துச் செல்லும் ஒரு புரட்சிகரமான சாதனமாக மாறியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu