நிலக்கரியில் இருந்து எரிவாயு தயாரிக்க வருவாய் பகிர்வில் 50%சலுகை

நிலக்கரியில் இருந்து எரிவாயு தயாரிக்க வருவாய் பகிர்வில் 50%சலுகை
X
நிலக்கரியில் இருந்து எரிவாயு தயாரிப்பை ஊக்குவிக்க வருவாய் பகிர்வில் 50% சலுகை வழங்க நிலக்கரி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது



நிலக்கரியில் இருந்து எரிவாயு தயாரிப்பை ஊக்குவிக்க வருவாய் பகிர்வில் 50% சலுகை வழங்க நிலக்கரி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். மும்பையில் முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர், எரிசக்திதுறையில் இந்தியா தனித்து விளங்க உதவிசெய்யும் விதமாக, நிலக்கரியில் இருந்து ஹைட்ரஜன் உற்பத்தி செய்வது போன்ற வாய்ப்புகளை ஆராயுமாறு கேட்டுக்கொண்டார்.

கோல் இந்தியா மற்றும் ஃபிக்கி அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த 'நிலக்கரி எரிவாயு தயாரித்தல்- மேலும் முன்னெடுத்து செல்லுதல்' என்ற தலைப்பிலான இந்த முதலீட்டாளர் கூட்டத்தில் நிலக்கரித்துறை இணையமைச்சர் ராவ் சாகேப் பாட்டீல் தன்வே, நிலக்கரி அமைச்சக கூடுதல் செயலாளர் எம் நாகராஜூ, கோல் இந்தியா நிறுவனத்தின் தலைவர் பிரமோத் அகர்வால் மற்றும் தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story