ஏற்றுமதியில் இந்தியா சாதனை: 40 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியது

ஏற்றுமதியில் இந்தியா சாதனை:  40 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியது
X
சரக்கு ஏற்றுமதிகள் ஏப்ரல் மாதத்தில் புதிய உச்சத்தை எட்டியது; 40 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டி, 30% வளர்ச்சியைப் பதிவுசெய்தது

கடந்த நிதியாண்டில் சாதனை படைத்த ஏற்றுமதி 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலும் அபரிமிதமான வளர்ச்சியை தொடர்ந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் சரக்கு ஏற்றுமதி 40 பில்லியன் அமெரிக்க டாலர் அளவை தாண்டியுள்ளது. இது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் 30 சதவீதம் அதிகமாகும். பெட்ரோலிய பொருட்கள் (127.69%), மின்னணு பொருட்கள்(71.69%), உணவு தானியங்கள் (60.83%), காபி(59.38%), பதப்படுத்தப்பட்ட உணவு வகை(38.82%), தோல் பொருட்கள்(36.68%) ஆகியவற்றின் ஏற்றுமதியில் சாதனை படைக்கப்பட்டுள்ளது. சேவை ஏற்றுமதி 27.60 பில்லியன் டாலராக இருந்தது. இது கடந்த ஆண்டு ஏப்ரலை விட, 53 சதவீதம் அதிகமாகும்.

இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி(சரக்கு மற்றும் சேவை இணைந்தது), 67.79 பில்லியன் டாலராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தை விட 38.90 சதவீதமாக நேர்மறை வளர்ச்சியை பெற்றுள்ளது. ஏப்ரல் 2022-ல் ஒட்டுமொத்த இறக்குமதி 75.87 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 36.31 சதவீதம் அதிகமாகும்.

Tags

Next Story
ai future project