ஜியோ 5G சேவை: நான்கு நகரங்களில் தொடக்கம்
டெலிகாம் நிறுவனமான ஜியோ, டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் வாரணாசி ஆகிய நான்கு நகரங்களில் அக்டோபர் 5 முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுடன் 5G சேவைகளின் பீட்டா சோதனையைத் தொடங்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜியோ தனது 5G சேவைகளை முயற்சிக்க 'Jio True 5G Welcome Offer' இன் கீழ் வாடிக்கையாளர்களுக்கு அழைப்புகளை அனுப்பும் மற்றும் சந்தாதாரர்கள் ஒரு நொடிக்கு 1 ஜிகாபிட் வேகத்தில் வரம்பற்ற 5G டேட்டாவை பெறுவார்கள்.
"இந்தியா மொபைல் காங்கிரஸ் 2022 இல் அதன் True-5G சேவைகளின் வெற்றிகரமான செயல்விளக்கத்திற்குப் பிறகு, மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரணாசி ஆகிய நான்கு நகரங்களில் உள்ள ஜியோ பயனர்களுக்காக தசரா சமயத்தில் ஜியோ தனது True-5G சேவைகளின் பீட்டா சோதனையை அறிவிக்கிறது.," என்று ஜியோ தனதுஅறிக்கையில் தெரிவித்துள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட 'ஜியோ வெல்கம் ஆஃபர்' பயனர்கள் தற்போதுள்ள ஜியோ சிம் அல்லது 5ஜி கைபேசியை மாற்றத் தேவையில்லாமல் தானாகவே ஜியோ ட்ரூ 5ஜி சேவைக்கு மேம்படுத்தப்படுவார்கள்.
வாடிக்கையாளர்கள் தங்களின் தற்போதைய 4G திட்டத்திற்கு மட்டுமே தொடர்ந்து பணம் செலுத்த வேண்டும் என்றும் சோதனையின் போது 5G டேட்டாவிற்கு கூடுதல் தொகை எதுவும் செலுத்த தேவையில்லை என்றும் கூறியுள்ளது
ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் தலைவர் ஆகாஷ் அம்பானி கூறுகையில், 5ஜியை ஏற்றுக்கொள்வதன் மூலம், திறன் மேம்பாடு, கல்வி, சுகாதாரம், விவசாயம் போன்ற பல துறைகளை மாற்றியமைக்கும் தேசத்தின் முதல் தளங்களையும் தீர்வுகளையும் ஜியோ உருவாக்கும். 5G என்பது சலுகை பெற்ற சிலருக்கு அல்லது பெரிய நகரங்களில் உள்ளவர்களுக்கு மட்டுமேயான பிரத்யேக சேவையாக இருக்காது. இது இந்தியா முழுவதும் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும், ஒவ்வொரு வீட்டிற்கும், ஒவ்வொரு வணிகத்திற்கும் கிடைக்க வேண்டும். அப்போதுதான் நமது ஒட்டுமொத்த பொருளாதாரம் முழுவதும் உற்பத்தி, வருவாய் மற்றும் வாழ்க்கைத் தரத்தை வியத்தகு முறையில் அதிகரிக்க முடியும், அதன் மூலம் நம் நாட்டில் வளமான மற்றும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்க முடியும்" என்று கூறினார்.
ஜியோ நிறுவனம் படிப்படியாக மற்ற நகரங்களுக்கு பீட்டா சோதனைச் சேவையைத் தொடங்கும். மேலும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் சிறந்த கவரேஜ் மற்றும் பயனர் அனுபவத்தை வழங்க ஒரு நகரத்தின் நெட்வொர்க் கவரேஜ் கணிசமாக முடியும் வரை பயனர்கள் இந்த பீட்டா சோதனையைப் பயன்படுத்த முடியும்.
2015ம் ஆண்டில் நெட்வொர்க் சோதனை மூலம் ஜியோ 4G மொபைல் சேவைகளைத் தொடங்கியது, வணிகரீதியான அறிமுகத்திற்கு முன்பே 15 லட்சம் சந்தாதாரர்களை பெற்றது. வணிகச் செயல்பாடுகள் தொடங்கப்பட்டு ஒரு மாதத்திற்குள் நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 1.5 கோடியாக அதிகரித்தது.
2016ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து, ஜியோ இப்போது 42.5 கோடி வாடிக்கையாளர்களுடன் இந்திய மொபைல் சந்தையில் முன்னணியில் உள்ளது.
பார்தி ஏர்டெல் டெல்லி, மும்பை மற்றும் வாரணாசி உள்ளிட்ட எட்டு நகரங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் 5G சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதிவேக மொபைல் சேவைகளுக்கான எந்த கட்டண திட்டத்தையும் நிறுவனம் இதுவரை அறிவிக்கவில்லை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu