பிராந்திய மொழிகளில் பங்குச்சந்தை அறியும் வசதி : நிதியமைச்சர் தொடக்கம்
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மும்பையில் நடந்த நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட் நிறுவனத்தின் வெள்ளி விழா கொண்டாட்டத்தில் பேசியபோது.
இந்திய சில்லறை முதலீட்டாளர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் முக்கிய பங்கு வகித்து உள்ளனர். அந்நிய முதலீட்டாளர்கள் போலில்லாமல் தங்களால் என்ன செய்யமுடியும் என்பதை இவ்வுலகிற்கு காட்டியுள்ளனர் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மும்பையில் நேற்று நடந்த நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட் (என்எஸ்டிஎல்) -ன் வெள்ளி விழா கொண்டாட்டத்தில் பேசினார்.
சில்லறை முதலீட்டாளர்கள் சார்பில் 2019-20ல் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 4 லட்சம் புதிய டிமேட் கணக்குகள் தொடங்கப்பட்டு, 2020-21ல் மாதத்திற்கு 12 லட்சமாக மூன்று மடங்கு அதிகரித்து, 2021-22ல் மாதத்திற்கு சுமார் 26 லட்சமாக அதிகரித்துள்ளது" என்று அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் பங்குச் சந்தை குறித்து மாணவர்கள் இந்தி மற்றும் பிராந்திய மொழிகளில் கற்றுக்கொள்வதற்காக 'பங்குச் சந்தைக்கான ஏகலைவா' எனும் திட்டத்தை தொடங்கி வைத்தார். பங்குச் சந்தை, நிதி ஆகியவற்றைக் குறித்து அறிந்து கொள்ளும் முக்கியத்துவத்தை குறிப்பிட்ட அவர், இவை அனைத்தும் பிராந்திய மொழியில் கிடைப்பதால் மாணவர்கள் பயனடைவார்கள் என்று தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu