பாஸ்போர்ட் ரெனியூவல் செய்ய வேண்டுமா? – அப்போ ITR உடனே ஃபைல் பண்ணிடுங்க!

பாஸ்போர்ட் ரெனியூவல் செய்ய வேண்டுமா? – அப்போ ITR உடனே ஃபைல் பண்ணிடுங்க!
X

Income tax returns (ITR) filing must for all - பாஸ்போர்ட் ரெனியூவல் செய்ய வேண்டுமா? – அப்போ ITR உடனே ஃபைல் பண்ணிடுங்க!

Income tax returns (ITR) filing must for all - நீங்கள் வருமான வரி விலக்கு வரம்பான ரூ.2.5 லட்சத்திற்கு கீழ் வருமானம் ஈட்டுபவராக இருந்தாலும், பாஸ்போர்ட் ரெனியூவல் செய்ய, வெளிநாடுகளுக்கு செல்ல விசா பெறுவதற்கு, ITR தாக்கல் செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

Income tax returns (ITR) filing must for all - நீங்கள் வருமான வரி விலக்கு வரம்பான ரூ.2.5 லட்சத்திற்கு கீழ் வருமானம் ஈட்டுபவராக இருந்தாலும், பாஸ்போர்ட் ரெனியூவல் செய்ய, வெளிநாடுகளுக்கு செல்ல விசா பெறுவதற்கு, ITR தாக்கல் செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

2021 – 2022 ஆம் நிதியாண்டிற்கான வருமான வரிக்கணக்கு தாக்கல் (ITR) செய்ய, இம்மாதம் 31ஆம் தேதி இறுதி நாள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதற்குப்பிறகு, இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Income tax returns (ITR) filing must for all - வருமான வரி விலக்கு வரம்புக்குள் ரூ.2.5 லட்சத்திற்கு கீழ் வருமானம் ஈட்டுவோரும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டுமா என்ற சந்தேகம் பலருக்கு எழுந்து உள்ளது. ஆனால், வரி கணக்கு ஏன் தாக்கல் செய்யவில்லை என்று வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்புவதைத் தவிர்க்க இதுபோல கணக்கு தாக்கல் செய்வது அவசியமாகிறது.

உங்கள் வருமானத்திற்கு TDS பிரிவின் கீழ் வரி பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது என்றால், நீங்கள் கணக்கு தாக்கல் செய்தால் மட்டுமே பிடித்தம் செய்யப்பட்ட வரியை திரும்பப் பெற இயலும் என்று நிதி மற்றும் வரி ஆலோசகர்கள் தெரிவித்து உள்ளனர். ஆக, உங்கள் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு கீழே என்றாலும் கூட, உங்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட வரியை நீங்கள் திரும்பப் பெற வேண்டும் என்றால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது அவசியமாகும்.

Income tax returns (ITR) filing must for all -உங்களுக்கு எந்தவித TDS வரியும் பிடித்தம் செய்யப்படவில்லை, அதே சமயம் வருமானமும் ரூ.2.5 லட்சத்திற்கு குறைவாக இருக்கிறது என்றால், நீங்கள் தற்போது கணக்கு தாக்கல் செய்ய வேண்டுமா என்ற சந்தேகம் உங்களுக்கு வருகிறதா ?

இதோ அந்த கேள்விக்கு, முன்னணி நிதி ஆலோசகர் தெரிவித்து உள்ளதாவது, குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு உங்கள் வருமானம் என்பது வருமான வரி விலக்கு வரம்பிற்கு உள்ளே இருந்தாலும் கூட நீங்கள் கணக்கு தாக்கல் செய்வதுதான் நல்லது. ஏனென்றால், ஆண்டுதோறும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்படும் நடைபெறும் எந்தவித இடைவெளியும் இல்லாமல் இருப்பதை இது உறுதி செய்யும் என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.

Income tax returns (ITR) filing must for all - நாம் வருமான வரி வரம்பிற்கு மேலே செல்லாவிட்டாலும் கூட, பாஸ்போர்ட் ரெனியூவல் அல்லது வெளிநாடுகளுக்கு செல்ல விசா வேண்டி விண்ணப்பம் செய்யும்போது, முந்தைய ஆண்டுகளின் வருமான வரி கணக்கு தாக்கல் அறிக்கையை கேட்க வாய்ப்பு உள்ளது என்பதால், ஆகவே வரிக் கணக்கு தாக்கல் செய்வது அவசியமாவதாக அவர் மேலும் தெரிவித்து உள்ளார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!