பங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி..

பங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி..
X
How to Invest in Share Market in Tamil-பங்குச்சந்தையில் முதலீடு செய்வது பற்றிய முழுமையான தகவல்.

How to Invest in Share Market in Tamil-பங்குச்சந்தையை நோக்கி உங்களை ஈர்த்தது எது என்றால் நீங்கள் எதை கூறுவீர்கள் கண்டிப்பாக பணத்தை இருமடங்காக மும்மடங்காக மாற்ற வேண்டும் என்று தான் கூறுவீர்கள். புதிய வர்த்தகர்கள் பங்குச்சந்தை மூலம் பெரிய அளவில் பணம் சம்பாதிக்க முடியும் என்ற ஆசையினால் மட்டுமே ஈர்க்கப்படுகின்றனர். இந்த வகையான உற்சாகம் நிச்சயம் நல்ல உந்துதலாக இருக்கலாம்.

இந்த நடைமுறைகள் வெற்றிகரமான செயலாக முடியாது. சில சமயங்களில் சந்தையின் ஏற்றத்தினால் இலாபங்கள் கிடைக்க கூடும். இத்தகைய நிலைகளில் நாம் மகிழ்ச்சியின் விளிம்பில் நாம் மொத்த பணத்தினையும் அல்லது கடன் பெற்றாவது சந்தையில் முதலீடுகள் செய்வோம். இதுவே நமக்கு ஆபத்தானதாக கூட முடியலாம். ஏனெனில் சந்தையில் நிகழும் ஏற்ற இறக்கங்களால் முதலீட்டில் இலாபம் மட்டும் அல்ல நஷ்டத்தினை சந்திக்க வாய்ப்புகள் உள்ளது.

பங்குச்சந்தை உயர்ந்தால் அது புல் மார்க்கெட், அதாவது காளையில் பிடியில் சந்தை இருப்பதாக அர்த்தம். காளை தன்னை தாக்க வருபவர்களை தன் கொம்பால், முட்டி தூக்கி மேலே வீசும், அது போல் பங்குச்சந்தை மிகப்பெரிய உச்சங்களை தொடும் காலத்தை இவ்வாறு அழைப்பார்கள்.

பங்குச்சந்தை சரிந்தால், அது பேர் மார்க்கெட், அதாவது கரடியின் பிடியில் இருப்பதாக அர்த்தம். கரடி தன்னை தாக்க வருபவர்களை தன் கைகளை கொண்டு கீழ் நோக்கி அடித்து, இறையாக்கி கொள்ளும். அவ்வாறு பங்குச்சந்தை கீழே சரிந்தால் அது கரடியில் பிடியில் இருப்பதாக கூறுவார்கள். ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பங்காற்ற கூடிய பங்குச்சந்தை ஒரு நாட்டின் பொருளாதாரம் எப்படி இருக்கிறது என்பதை கூறும் குறியீடாகவும் பொருளாதாரத்தில் பார்க்கப்படுகிறது.

How to Invest in Share Market in Tamil வர்த்தகம் என்பது என்ன?

உண்மையில் புதிய வர்த்தகர்கள் பெரிய லாபத்தின் ஆற்றலால் திசை திருப்பபட்டு அதிஷ்டத்தின் அடிப்படையில் வர்த்தகத்தை தொடங்குகின்றனர். ஊகம் மற்றும் அதிஷ்டத்தின் அடிப்படையில் வர்த்தகத்தினை தொடர முடியாது. உண்மையில் வர்த்தகம் என்பது கணக்கீடுகள் ஆகும். நிறுவனங்களை பற்றிய முழுமையான தெளிவுகள் மற்றும் கணக்கீடுகள் ஆகியவற்றை அடக்கியதே வர்த்தகம்.

புதிதாக பங்குச்சந்தையில் நுழையும் பொழுது அவற்றினை பற்றிய முழுமையான புரிதல் மிக அவசியமானதாகும். அதுமட்டும் இல்லாமல் நாம் முதலீடு செய்யும் பணம் நம் வாழ்நாள் சேமிப்பு பணமாக இருக்க கூடாது. வாழ்நாள் சேமிப்பு பணம் இல்லாமல் உபரியாக இருக்கும் பணத்தினை மட்டுமே முதலீட்டில் ஈடுபட வேண்டும்.

How to Invest in Share Market in Tamil பங்கு வர்த்தகம் சூதாட்டம் கிடையாது:

நீங்கள் கடினமான சம்பாதித்த பணத்தினை வைத்து சூதாடக்கூடாது. சூதாட்டத்தினால் இங்கு யாரும் பணக்காரர்கள் ஆனது கிடையாது.நிச்சயமாக ஒரு முறை இருமுறை வெற்றி அடைந்திருப்பீர்கள். அதை அதிஷ்டம் என நினைத்து அந்த தவறை நீண்டகாலம் தொடர்ந்து செய்வது சரியல்ல அது வெற்றியைத்தறாது.

பங்குச்சந்தையை சூதாட்டமாக எண்ணாமல் ஒரு சிலர் பங்கு பெரும் போட்டி அல்லது விளையாட்டாக எண்ணிப்பார்க்க வேண்டும். போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றால் கண்டிப்பாக பயிற்சி பெற வேண்டும். அதைப்போல பங்கு வர்த்தகத்தில் வெற்றிபெற கண்டிப்பாக பயிற்சி அவசியமானதாகும். சந்தை எவ்வாறு நகர்கிறது எந்த காரணங்களினால் ஏற்றம் அடைகிறது என்று அறிந்திருக்க வேண்டும். அப்பொழுது தான் சந்தையில் வெற்றியாளராக இருக்க முடியும்.

How to Invest in Share Market in Tamil பண மேலாண்மை:

நீங்கள் புரிந்துகொள்ள வேண்டிய முக்கிய ஒன்று பண மேலாண்மை. ஏனென்றால் இது நமது மூலதனத்தினை பாதுகாக்கிறது. அனைத்து புதிய வர்த்தகர்களும் செய்யும் புதிய தவறு பணம் முழுவதையும் ஒரே வர்த்தகத்தில் வைப்பது தான் .இதனால் சிறு தவறுகள் நடந்தாலும் நமது மொத்த பணமும் பாதிக்கப்பட்டு விடும்.

பங்கு சந்தையில் முதலீடுகள் தொடங்க முதலில் செய்ய வேண்டியவை

ஒரு நிறுவன பங்கினை வாங்க நினைத்தால் உங்கள் மொத்த முதலீட்டு தொகையில் 10% மட்டுமே முதலீடுகள் செய்ய வேண்டும். நாம் என்னும் சாத்தியமான வருமானம் என்பது லாபமாகவும் இருக்கலாம் அல்லது நஷ்டமாகவும் இருக்கலாம். இது நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றது. இழப்புகளை பற்றி நாம் மறக்க கூடாது. நீங்கள் வருமானத்தினை மட்டுமே கணவு காண்கிறீர்கள். நஷ்டத்தினை நினைப்பதே கிடையாது. நாணயத்தின் இருப்பக்கங்கள் எப்படி வேண்டுமானாலும் திரும்பலாம் என்பதை நினைக்க வேண்டும்.

கற்றல் மிக முக்கியம்

மக்கள் பொதுவாக உதவி குறிப்புகளை நம்பி முதலீடுகள் செய்வார்கள். உதவி குறிப்புகள் மற்றும் பிறரின் சொல்லிற்காக ஒரு பங்கினை நாம் வாங்க கூடாது. நாம் வண்டி ஓட்ட பழகும் போது பிறரின் உதவியை கேட்கலாம். ஆனால் வாழ் நாள் முழுவதும் பிறரின் உதவியை கேட்பது முட்டாள்தனமான செயல் ஆகும்.

சிறந்த பங்கை தேர்வு செய்வது எப்படி?

உண்மையில் நீங்கள் முதலீட்டினை துவங்கும் முன் ஒரு வழிகாட்டியின் உதவியை நாடலாம். ஒரு பங்குச்சந்தை வெற்றியாளரின் அறிவுறையை கேட்கலாம். அதில் எந்த தவறும் இல்லை அவரின் வெற்றியினை மட்டும் பார்க்காமல் அவரின் வெற்றி தோல்வியினையும் கற்க வேண்டும். எல்லோரிடம் இருந்தும் கற்றுக்கொள்ளுங்கள் அவர்களின் வெற்றி தோல்வியினையும் சேர்த்துத்தான். ஆனால் அவர்களின் முதலீடுகளை பின்பற்றாதீர்கள். நீங்கள் பங்கு வர்த்தகத்தில் தன்னிறைவு பெறும் வரை கற்றுக்கொள்ளுங்கள்.

திட்டத்தை வகுக்கவும்

நல்ல அனுபவம் வாய்ந்த வர்த்தகர்கள் சிறந்த திட்டங்களின் அடிப்படையில் சந்தையில் முதலீடுகளை தொடங்குகின்றனர். அவர்கள் சந்தையின் சரியான காலத்தினை கணித்து பங்குகளை வாங்குகிறார்கள். அதேபோல் சரயான நேரத்தில் பங்கை விற்று விட்டு வெளியேறுகின்றனர்.

புதிதாக வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் இத்தகைய திட்டத்தினை கடைபிடிப்பது கிடையாது. முதலில் ஒரு வர்த்தகத்தை தொடங்கும் முன் ஒரு திட்டங்களை வகுப்பது புத்திசாலி தனமாகும். இந்த பங்கினை ஏன் வாங்குகிறோம். எந்த காரணத்தினால் இப்பங்கின் விலை எதிர்காலத்தில் உயரும் என கணித்த பின் ஒரு பங்கினை வாங்குவது வர்த்தகத்தினை தொடர்வது நல்லதாகும்.

How to Invest in Share Market in Tamil ஷேர் மார்க்கெட்டில் பணம் சம்பாதிக்க ஷேர் மார்க்கெட்டை பற்றி நமக்கு முழுமையாக தெரிந்திருக்க வேண்டும் அப்படி இல்லையெனில் ஷேர் மார்க்கெட்டில் பணத்தை இழக்க நேரிடும் .

ஷேர் மார்க்கெட்டில் பல விதமான கருத்துக்கள் இருக்கலாம் அதில் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் நிறைய கேட்டிருப்போம் அதைப் பற்றி முழுமையாக காண்போம் .

ஷேர் மார்க்கெட்டில் ஒரு பங்கினை குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்வதன் மூலம் எது அதிக பணம் சம்பாதிக்கலாம் .

பங்குச் சந்தையில் எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் ?

நீண்ட கால முதலீடு

உண்மையில் ஷேர் மார்க்கெட்டில் ஒரு பங்கினை வாங்கி நீண்ட காலத்திற்கு வைத்திருப்பதன் மூலம் நீங்கள் ஒரு நல்ல லாபத்தை அடையலாம் . நீங்கள் நீண்ட காலத்திற்கு வைத்திருப்பதனால் 99% நீங்கள் லாபம் மட்டுமே அடையலாம் . நீங்கள் சாறினை நீண்டகாலத்தில் வைத்திருப்பதன் மூலம் உங்களுக்கு டிவிடெண்ட் தொகையும் போனஸ் பங்கும் கிடைக்கும் இதனால் பன்மடங்கு லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம் .)

டிவிடெண்ட் ஒரு நிறுவனத்தில் வரும் லாபத்தினை கம்பெனியில் திரும்பவும் முதலீடு செய்யாமல் பங்குதாரர்களை பிரித்துக் கொடுப்பது டிவிடெண்ட். இத்தகைய பங்குகளை வாங்குவதன் மூலம் பங்கினை விற்கும்போது வரும் லாபத்தை விட நீண்ட நாட்களுக்கு வைத்திருப்பதன் மூலம் ஆண்டிற்கு ஒன்று முதல் ஐந்து முறை டிவிடெண்ட் தொகை கிடைக்கும் .

போனஸ் பங்குகள் என்பது அதன் பங்குதாரர்களுக்கு அவர்கள் வைத்திருக்கும் பங்குகளை இலவசமாக தருவது . போனஸ் தரும்பொழுது அந்த கம்பெனியின் விலை குறையும் . இதனால் நீண்ட காலம் வைத்திருப்பதால் உங்கள் லாபம் இரட்டிப்பாகும்.

குறுகிய கால முதலீடு:

ஒரு குறுகிய காலத்தில் அதாவது ஒரு மாதம் இரண்டு மாதம் அதற்குள் ஒரு கம்பெனியில் முதலீடு செய்து லாபம் எடுப்பது . இது அந்தக் கம்பெனியின் புதிய ஒப்பந்தம் அல்லது புதிய திட்டங்கள் கொண்டு வரும்போது முதலீடு செய்வது.

உதாரணமாக டாடா நிறுவனம் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை வாங்கும் போது ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குள் அதன் பங்குகள் விலை அதிகரித்தது . ஒரு நிறுவனத்தைப் பற்றி ஒரு நல்ல செய்தி வரும் பொழுது அதன் பங்குகள் விலை அதிகரிக்கும் அல்லது நிறுவனத்தைப் பற்றி ஒரு தவறான செய்தி வரும் பொழுது அதன் பங்குகள் விலை குறையும் இது ஷேர் மார்க்கெட்டின் வழக்கம்

விருப்பம் மற்றும் கணிப்பு

விருப்பம் மற்றும் கணிப்புகள் என்பது பங்குசந்தை மேலே ஏறுவது அல்லது கீழே இறங்குவதை கணிப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் . இதில் உங்கள் முழு பணத்தை இழப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அதேபோல் உங்கள் பணம் குறுகிய காலத்தில் பன்மடங்கு லாபம் தரும்.

நாள் வர்த்தகம்

நாள் வர்த்தகம் என்பது ஒரு பங்கினை ஒரே நாளில் வாங்கி அன்றே விற்பனை செய்வது.

ஸ்விங் வர்த்தகம் :

ஸ்விங் வர்த்தகம் என்பது ஒரு பங்கினை வாங்கி குறைந்தபட்ச லாப விலையில் விற்பது. .அதிக முறை செய்யும்போது லாபம் அடையும் வாய்ப்புகள் அதிகம் .

மக்கள் ஏன் பங்குகளில் பணத்தை இழக்கிறார்கள்:

சராசரியாக, 2021 ஆண்டில் Nifty & Sensex 26% வளர்ச்சி அடைந்து உள்ளது. பிறகு ஏன் நேரடியாக பங்குகளில் முதலீடு செய்த பலர் பணத்தை இழந்தார்கள்? அவர்கள் தவறான பங்குகளை வாங்கியதே இதற்குக் காரணம். தவறான பங்குகள் என்ன? மோசமான வணிகத்தின் பங்குகள் அல்லது தவறான விலையில் வாங்கப்பட்டவை. இந்த தெளிவின்மையை எவ்வாறு சமாளிப்பது?

பங்குகளில் பணத்தை இழக்காமல் இருப்பது எப்படி:

பங்குச் சந்தையில் ஆபத்து இல்லாமல் முதலீடு செய்ய விரும்புபவர்கள். 10-15 ஆண்டுகள் முதலீடு செய்யலாம். அவர்கள் நஷ்டம் அடையாமல் இருப்பதற்கு கிட்டத்தட்ட 99% வாய்ப்புகள் உள்ளன.

ரிஸ்க் எடுக்கத் தயாராக இருப்பவர்களுக்கு, பணத்தை இழக்காமல் இருப்பதற்கான வழி, பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கான ஒரு உத்தியை உருவாக்குவதாகும்.

ஆனால்நீங்கள் நேரடி பங்குகளை தேர்வு செய்தால் பணம் இரட்டிப்பு சாத்தியம். ஆனால் நேரடி பங்குகளும் ஆபத்தானவை. நீங்கள் சரியான முறையில் முதலீடு செய்யவில்லை என்றால், பணத்தை இழக்கும் வாய்ப்புகள் கிட்டத்தட்ட உறுதி.

பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் செயல்முறை எப்படி இருக்க வேண்டும்?

ஆராய்தல்:

ஒரு பங்கைப் பற்றி நாம் எவ்வளவு நம்பிக்கையுடன் இருந்தாலும், அதை ஆய்வு செய்யாமல் வாங்க முடியாது. அடுத்தவர்கள் உங்களை ஒரு பங்கை வாங்கச் சொன்னாலும், அதை நீங்களே ஆராயாமல் அதை வாங்காதீர்கள். நீங்கள் ஆராய்ச்சி செய்து, அதைப் பற்றி நம்பிக்கையுடன் உணர்ந்தவுடன், அதை வாங்கவும்.

செயல்பாடுகளை கண்காணித்தல்

பங்குகளை வாங்கி அதை மறந்துவிட முடியாது. என்ன செய்ய வேண்டும் என்று பங்குகளை கண்காணிக்க வேண்டும். ஒருவர் கண்காணிக்கவில்லை என்றால், விற்க வேண்டிய நேரம் அவருக்குத் தெரியாது. பங்குகளின் செயல்திறனை எவ்வாறு கண்காணிப்பது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

இலக்கு நிர்ணயம்

பொதுவாக ரூ.100க்கு வர்த்தகம் செய்யப்படும் ஒரு பங்கு, இப்போது ரூ.65க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அடுத்த 6 மாதங்களில் பங்கின் விலை குறைந்தபட்சம் ரூ.75 ஆக உயரக்கூடும் என்று நீங்கள் மதிப்பிடலாம். எனவே 6 மாதங்களில் ரூ.75 என்ற இலக்கை நிர்ணயித்துள்ளீர்கள் (தற்போதைய விலையில் இருந்து 15% அதிகம்). தெளிவான பங்கின் இலக்கு விலைக்கு எனது பங்கு கண்காணிப்புப் பட்டியலைச் சரிபார்க்கவும்.

சரியான நேரத்தில் விற்பது

'சரியான பங்குகளை' வாங்குவது எவ்வளவு முக்கியமோ, அந்த பங்குகளை சரியான நேரத்தில் விற்பதும் முக்கியம். சரியான நேரத்தை எப்படி அறிவது? ஒரு பங்கு அதன் இலக்கை அடையும் போது விற்றுவிடவும். அதிக வருமானத்திற்கு பேராசை கொள்ளாதீர்கள். பங்குகளை அதன் இலக்கை அடைந்தவுடன் விற்கவும்.

மீண்டும் முதலீடு

நீங்கள் பங்குகளை விற்றுவிட்டீர்கள் என்பதற்காக, இந்தப் பணத்தைச் செலவழிக்க முடியும் என்று அர்த்தமில்லை. இந்த மீட்டெடுக்கப்பட்ட பணம் மீண்டும் மறுமுதலீடு செய்து மற்றொரு நல்ல மதிப்பிழந்த பங்குகளை வாங்குவதே ஐடியாவாகும். மறுமுதலீடு ஒருவரை வருவாயைக் கூட்டும் சக்தியைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கிறது

நாம் ஷேர் மார்க்கெட்டில் எந்த அளவிற்கு பணம் சம்பாதிப்பதற்கு சம்பாதிப்பது முக்கியமோ அதே அளவிற்கு பணத்தை இழக்காமல் இருப்பது அதை விட முக்கியம் .


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!