ஜிஎஸ்டி இழப்பீடாக தமிழகத்திற்கு ரூ.2,036.53 கோடி வழங்கிய மத்திய அரசு

ஜிஎஸ்டி இழப்பீடாக தமிழகத்திற்கு ரூ.2,036.53 கோடி வழங்கிய மத்திய அரசு
X
ஜிஎஸ்டி இழப்பீடாக, தமிழ்நாட்டிற்கு ரூ 2,036.53 கோடியை, மத்திய அரசு வழங்கியது.

சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீடாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ 40,000 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதில், தமிழ்நாட்டிற்கு ரூ 2,036.53 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டை எதிர்கொள்வதற்காக இந்த வருடம் மொத்தம் ரூ 1,15,000 கோடி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. செஸ் வரி வசூலில் இருந்து இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டிற்கு, கூடுதலாக மேற்கண்ட தொகை வழங்கப்பட்டுள்ளது.

இழப்பீட்டை எதிர்கொள்வதற்கான நிதியை, கடன் வசதியின் மூலம் வழங்கும் ஏற்பாடுகளுக்கு அனைத்து மாநிலங்கள் மற்றும் (சட்டமன்றங்களுடன் கூடிய) யூனியன் பிரதேசங்கள் ஒப்புக்கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!