அட்சய திருதியை நாளில் நல்ல செய்தி! தங்கம் விலை ரூ.200 குறைவு
இன்று அட்சய திருதியை நாளாகும். அட்சய திருதியை தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும். முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மனால் உலகம் தோற்றுவித்த நாள் அட்சய திருதியை ஆகும். "அட்சயா" எனும் சொல் சமசுகிருதத்தில் எப்போதும் குறையாதது எனும் பொருளில் வழங்கப்படுகிறது.
மங்களகரமான நீண்டகால சொத்துக்களான தங்கம், வெள்ளி, அவற்றினால் செய்யப்பட்ட நகைகள், வைரம் மற்றும் இதர விலைமதிப்பற்ற கற்கள் மற்றும் வீடு-மனைகள் போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது. இன்றைய நாளில் கல் உப்பு, மஞ்சள் வாங்கினாலும் தங்கம் வாங்குவதற்குரிய பலன்கள் கிடைக்கும். நம்முடைய வீட்டில் செல்வம் பெருகும். சுக்கிரன் ஆசி நிறைந்த செவ்வாய்கிழமை அட்சய திருதியை வருவது சிறப்பானதாகும்.
இந்த நிலையில், அட்சய திருதியை நாளான இன்று சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, ஒரு சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.38,528க்கு விற்பனையாகிறது. இதேபோல், ஒரு கிராம் தங்கம் விலை, ரூ.25 குறைந்து விலை ரூ.4,816-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ரூ.67 -க்கு விற்பனையாகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், விற்பனையை இன்று அதிகரிக்கும் நோக்கில் விலை மேலும் குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu