ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை; ஒரு சவரன் ரூ.40 ஆயிரத்தை கடந்தது

ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை; ஒரு சவரன் ரூ.40 ஆயிரத்தை கடந்தது
X
சென்னையில் இன்று தங்கம் விலை கிடுகிடுவென்று உயர்ந்து, சவரன் ரூ.40,440-க்கு விற்பனையாகிறது.

உக்ரைன் - ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போரின் தாக்கம், பல்வேறு வகையில் எதிரொலிக்கிறது. கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை, இன்று 139 டாலர் என்று உயர்ந்துள்ளது.

அதேபோல், தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்களில் விலையும் கடுமையாக அதிகரித்து வருகிறது. அண்மை காலமாக தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இன்றும் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து, நடுத்தர குடும்பத்தினருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 680 உயர்ந்து ரூ.40,440-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூ.85 உயர்ந்து, ரூ.5,055 ஆக உள்ளது. வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1.80 உயர்ந்து, ரூ. 75.2-க்கு விற்பனையாகிறது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!