தங்கம் விலை மீண்டும் இறங்குமுகம்: சவரனுக்கு ரூ.880 குறைந்தது
X
By - S.Elangovan,Sub-Editor |10 March 2022 10:30 AM IST
தங்கம் விலை ஏறுவதும் இறங்குவதுமாக உள்ளது. இன்று, சென்னையில் ஆபரணத் தங்கம் விலை, சவரனுக்கு ரூ.880 குறைந்துள்ளது.
உக்ரைன் - ரஷ்யா போரின் தாக்கத்தால், கச்சா எண்ணெய், தங்கம் உள்ளிட்டவற்றின் விலை அதிகரித்து வருகிறது. இதில், தங்கம் விலை ஏறுவதும் இறங்குவதுமாக உள்ளது.
இன்று காலை நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை, சவரனுக்கு ரூ. 880 குறைந்து ரூ. 39280 ஆக விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 110 குறைந்து, ரூ. 4910 ஆக விற்கப்பட்டு வருகிறது.
இதேபோல், வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. வெள்ளி விலை, கிராமிற்கு ரூ. 2.60 குறைந்து ரூ. 74.10 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu