தங்கம் விலை மீண்டும் உயர்வு: ஒரு சவரன் ரூ.40 ஆயிரத்தை நெருங்கியது

தங்கம் விலை மீண்டும் உயர்வு: ஒரு சவரன் ரூ.40 ஆயிரத்தை நெருங்கியது
X
தங்கம் விலை மீண்டும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது; ஒரு சவரன் ரூ.40 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

உக்ரைன் - ரஷ்யா போரின் எதிரொலியாக தங்கம் விலை அதிகரித்து வருகிறது. ஒரு சில தினங்களில் தங்கம் விலை குறைவதுமாக உள்ளது.

இந்த நிலையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி, தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.776 உயர்ந்து, ரூ. 39,760-க்கு விற்பனையாகிறது. தங்கம் ஒரு கிராம் ரூ. 97 உயர்ந்து ரூ.4979 ஆக விற்பனையாகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 73.40 க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 73400 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!