வணிக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு

வணிக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு
சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.134 குறைந்தது. ஒரு சிலிண்டரின் விலை தற்போது ரூ. 2,373-க்கு விற்பனை. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை.

சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

அதன்படி, பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றி அமைக்கும் நடைமுறையையும், காஸ் சிலிண்டர் விலையை மாதத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நடப்பு மாதத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி, 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

அதே நேரத்தில் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலை மாற்றப்பட்டுள்ளது. அதாவது, கடந்த மாத விலையில் இருந்து ரூ.134 குறைத்து ரூ.2,373 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story