அதானி, அம்பானி, தமானி: இந்திய டாப் 100 கோடீசுவரர்களின் பட்டியல்

அதானி, அம்பானி, தமானி: இந்திய டாப் 100 கோடீசுவரர்களின் பட்டியல்
X

போர்ப்ஸ் இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியல்

இந்தியாவின் டாப் 100 கோடீசுவரர்கள் அடங்கிய பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு உள்ளது.

2022ம் ஆண்டுக்கான இந்தியாவின் டாப் 100 கோடீசுவரர்கள் அடங்கிய பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு உள்ளது. இந்த பட்டியலின்படி, இந்தியாவின் 100 கோடீசுவரர்களின் சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சத்து 4 ஆயிரத்து 200 கோடியில் இருந்து ரூ.65 லட்சத்து 34 ஆயிரத்து 404 கோடி அளவுக்கு வளர்ச்சி அடைந்து உள்ளது.

கடந்த ஓராண்டுக்கு முன்பு நாட்டில் பங்கு வர்த்தக சூழல் வீழ்ச்சி கண்டிருந்தபோதும், இந்திய ரூபாய் மதிப்பு 10 சதவீதம் அளவுக்கு சரிந்தபோதும் இந்த வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

பட்டியலில் முதல் இடத்தில் தொடர்ந்து கவுதம் அதானி நீடித்து வருகிறார். இதற்கு அடுத்து 2-வது இடத்தில் தொடர்ந்து முகேஷ் அம்பானி இடம் பெற்றுள்ளார். மூன்றாம் இடத்தில் தமானி இருக்கிறார்

போர்ப்ஸ் அறிக்கையின்படி, முதல் 10 இடத்தில் உள்ள கோடீசுவரர்களின் மொத்த சொத்து மதிப்பு மட்டுமே ரூ.31 லட்சத்து 44 ஆயிரத்து 681 கோடியாக உள்ளது.

இந்த பணக்காரர்களின் பட்டியலில் 9 பெண்களும் இடம் பெற்று உள்ளனர். இந்தியாவின் ஆண் கோடீசுவரர்களில் முதல் இடத்தில் உள்ளவரின் சொத்து மதிப்பு ரூ.12 லட்சத்து 25 ஆயிரத்து 200 கோடியாகவும், பெண் கோடீசுவரர்களில் முதல் இடத்தில் உள்ளவரின் சொத்து மதிப்பு ரூ.1 லட்சத்து 33 ஆயிரத்து 950 கோடியாகவும் உள்ளது.


1. கௌதம் அதானி & குடும்பம்

சொத்து மதிப்பு: 150 பில்லியன் டாலர்

பல்வகை தொழில்


2. முகேஷ் அம்பானி

சொத்து மதிப்பு: 88 பில்லியன் டாலர்

பல்வகை தொழில்


3. ராதாகிஷன் தமானி & குடும்பம்

சொத்து மதிப்பு:27.6 பில்லியன் டாலர்

ஃபேஷன் & சில்லறை விற்பனை


4. சைரஸ் பூனவல்லா

சொத்து மதிப்பு:21.5 பில்லியன் டாலர்

சுகாதாரம்


5. ஷிவ் நாடார்

சொத்து மதிப்பு:21.4 பில்லியன் டாலர்

தொழில்நுட்பம்


6. சாவித்ரி ஜிண்டால் & குடும்பம்

சொத்து மதிப்பு:16.4 பில்லியன் டாலர்

உலோகம் & சுரங்கம்


7. திலீப் ஷங்வி & குடும்பத்தினர்

சொத்து மதிப்பு:15.5 பில்லியன் டாலர்

சுகாதாரம்


8. இந்துஜா சகோதரர்கள்

சொத்து மதிப்பு:15.2 பில்லியன் டாலர்

பல்வகை தொழில்


9. குமார் பிர்லா

சொத்து மதிப்பு:15 பில்லியன் டாலர்

பல்வகை தொழில்


10. பஜாஜ் குடும்பம்

சொத்து மதிப்பு:14.6 பில்லியன் டாலர்

பல்வகை தொழில்


11. சுனில் மிட்டல் & குடும்பம்

சொத்து மதிப்பு:14.5 பில்லியன் டாலர்

தொலை தொடர்பு


12. உதய் கோடக்

சொத்து மதிப்பு:14.3 பில்லியன் டாலர்

நிதி & முதலீடுகள்

13. ஷபூர் மிஸ்திரி & குடும்பம்

சொத்து மதிப்பு:14.2 பில்லியன் டாலர்

பல்வகை தொழில்


14. கோத்ரேஜ் குடும்பம்

சொத்து மதிப்பு:13.9 பில்லியன் டாலர்

பல்வகை தொழில்


15. லட்சுமி மிட்டல்

சொத்து மதிப்பு:13.8 பில்லியன் டாலர்

உலோகம் & சுரங்கம்

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!