கேரள அரசின் ஓணம் பம்பர் லாட்டரி முதல் பரிசு ரூபாய் 12 கோடியாம்

கேரள அரசின் ஓணம் பம்பர் லாட்டரி முதல் பரிசு ரூபாய் 12 கோடியாம்
X
கேரள அரசின் ஓணம் பம்பர் லாட்டரி முதல் பரிசு ரூ.12 கோடி என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கேரள மாநிலத்தில் அரசு லாட்டரி விற்பனை செய்கிறது.

கேரள அரசின் ஓணம் பம்பர் லாட்டரி முதல் பரிசு ரூ.12 கோடி என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கேரள மாநிலத்தில் அரசு லாட்டரி விற்பனை செய்கிறது. வருடந்தோறும் ஓணம், கிறிஸ்துமஸ், சித்திரை விஷூ உள்பட பண்டிகைகளையொட்டி பம்பர் லாட்டரி குலுக்கல் நடத்தப்படும். கடந்த இரு மாதங்களாக கொரோனா பரவல் காரணமாக அனைத்து லாட்டரி விற்பனையும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் 2 வாரங்களுக்கு முன்பு லாட்டரி விற்பனை மீண்டும் தொடங்கப்பட்டது. இதற்கிடையே ஓணம் பம்பர் லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இந்த பம்பர் லாட்டரி முதல் பரிசு ரூ.12 கோடி. 2வது பரிசாக 6 பேருக்கு தலா ரூ.1 கோடி. டிக்கெட் விலை ரூ.300 என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!