பங்குச் சந்தைகள்: இன்று எச்சரிக்கையுடன் வர்த்தகம் நடைபெறும்
அமெரிக்க-சீனா இடையிலான பதட்டங்கள் காரணமாக, சீன ரைட்-ஹைலிங் நிறுவனமான டிடி நியூயார்க்கில் டீலிஸ்ட் செய்யப்படும் என்று கூறியதை அடுத்து ஆசிய பங்குகள் சரிந்தன. எஸ்ஜிஎக்ஸ் நிஃப்டியின் போக்குகள், சந்தைகளில் சரிவுடனான தொடக்கத்தைக் குறிக்கிறது.
நிஃப்டி ஃபியூச்சர்ஸ் என்றும் அழைக்கப்படும் சிங்கப்பூர் எக்ஸ்சேஞ்சில் நிஃப்டி ஃபியூச்சர்ஸ் 0.26 சதவீதம் அல்லது 45.75 புள்ளிகள் சரிந்து 17,403.50 ஆக இருந்தது.
BSE சென்செக்ஸ் வியாழன் அன்று 776.50 புள்ளிகள் அல்லது 1.35 சதவீதம் உயர்ந்து 58,461.29 ஆக இருந்தது; என்எஸ்இ நிஃப்டி 234.75 புள்ளிகள் அல்லது 1.37 சதவீதம் உயர்ந்து 17,401.65 ஆக இருந்தது.
இன்றைய வர்த்தகத்தின் போது பார்க்க வேண்டிய பங்குகள் இதோ:
மாருதி சுசுகி : நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனம், உள்ளீட்டு செலவுகள் அதிகரிப்பதால் ஜனவரி 2022ல் விலையை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது. வெவ்வேறு மாடல்களுக்கு விலை உயர்வு மாறுபடும் என்று மாருதி தெரிவித்துள்ளது.
ஆர்த்தி இண்டஸ்ட்ரீஸ்: HDFC அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனம் நவம்பர் 30 அன்று சந்தை பரிவர்த்தனைகள் மூலம் நிறுவனத்தில் 1,74,221 பங்குகளை விற்றது, முந்தைய 3.09 சதவீதத்திலிருந்து 3.04 சதவீதமாக பங்குகளை குறைத்துள்ளது.
ஜெட் ஏர்வேஸ்: தனியார் விமான நிறுவனம் போயிங் கோ மற்றும் ஏர்பஸ் எஸ்இ நிறுவனங்களுடன் சுமார் 100 சிறிய விமானங்களை வாங்க 12 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆர்டருக்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
டாடா பவர்: டாடா பவர் சோலார் சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனத்தை தன்னுடன் இணைப்பதற்கான அதன் முந்தைய திட்டத்திற்கு மாறாக, திட்டத்தில் திருத்தம் செய்ய பங்குதாரர்களின் ஒப்புதல் கிடைத்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ): நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநரான அதானி கேபிட்டல் நிறுவனத்துடன் இணைந்து, விவசாயிகளுக்குக் கடன் வழங்க இணைக் கடன் வழங்கும் பங்குதாரராக உள்ளது. அதானி குழுமத்தின் பிரிவான அதானி கேபிடல் பிரைவேட் லிமிடெட் (அதானி கேபிடல்) உடன் எஸ்பிஐ விவசாயிகளுக்கு டிராக்டர் மற்றும் பண்ணைக் கருவிகளை வாங்குவதற்கு இணை கடன் வழங்குவதற்கும், பண்ணை செயல்பாடுகள் மற்றும் பயிர்களின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்காண முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது
லார்சன் & டூப்ரோ (L&T): கட்டுமான மேஜர் மற்றும் முன்னணி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமான ReNew Power (ReNew) இந்தியாவில் 60 பில்லியன் டாலர் வளர்ந்து வரும் பசுமை ஹைட்ரஜன் சந்தையை பெறுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
வேதாந்தா: வேதாந்தா லிமிடெட்டின் ஒரு பிரிவான கெய்ர்ன் ஆயில் அண்ட் கேஸ், அடுத்த 2-3 ஆண்டுகளில் 5 பில்லியன் டாலர் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது, இது ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 500,000 பீப்பாய்கள் எண்ணெய் உற்பத்தியை விரிவுபடுத்த உள்ளதாக அதன் தலைமை நிர்வாகி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu