கடந்த நிதியாண்டில் நேரடி வரி வசூல் இதுவரை இல்லாத அளவு உயர்வு

கடந்த நிதியாண்டில் நேரடி வரி வசூல் இதுவரை இல்லாத அளவு உயர்வு
X
கடந்த நிதியாண்டில் நேரடி வரி வசூல் முந்தைய நிதியாண்டை (2020-21) காட்டிலும் 49 சதவீதம் அதிகரிப்பு

தனி மனிதர்களோ அல்லது நிறுவனங்களோ அரசுக்கு நேரடியாக செலுத்துகின்ற பெருநிறுவன வருமான வரி, தனிநபர் வருமான வரி, சொத்து வரி போன்றவை நேரடி வரிகள் ஆகும்.

கடந்த 2021-22ம் நிதியாண்டில் மத்திய அரசின் நேரடி வரி வசூல் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.14.09 லட்சம் கோடியை எட்டியுள்ளது.

இது முந்தைய நிதியாண்டை (2020-21) காட்டிலும் 49.02 சதவீதம் அதிகமாகும். 2020-21ம் நிதியாண்டில் மத்திய அரசுக்கு நேரடி வரிகள் வாயிலாக ரூ.9.45 லட்சம் கோடி மட்டுமே வசூலாகி இருந்தது என மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் ஜே.பி.மோஹபத்ரா தெரிவித்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!