கிரிப்டோகரன்சி: அப்படின்னா என்ன? பதிவை படிச்சு தெரிஞ்சுக்கோங்க

Cryptocurrency in Tamil
Cryptocurrency in Tamil-உலகம் முழுவதும் டிஜிட்டல் மயமாகி வரும் சூழலில் கிரிப்ட்டோகரன்சி என்பது டிஜிட்டல் நாணயமாக இன்று இளைய தலைமுறையினரிடம் பெருமளவு பிரபலமாகி வருகிறது. குறுகிய காலத்தில் அதிக லாபம் பார்க்கும் ஆசை பெரும்பாலானோருக்கு இருக்கிறது. இதைப் பயன்படுத்தி கிரிப்டோகரன்சி வெளியிடுபவர்கள் லாபம் பார்க்கின்றனர். கிரிப்டோகரன்சிகளின் மதிப்பு லட்சத்தில் இருந்தாலும், அதில் ரூ.100 கூட முதலீடு செய்ய முடியும் என்பதால் அதில் சிறுசிறு முதலீட்டாளர்களும் கூட முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.
கிரிப்டோகரன்சி நாணயம் அல்லது நோட்டு போன்ற வடிவத்தில் உங்கள் கையில் இருக்காது. கிரிப்டோகரன்சிகளை போலியாக உருவாக்க முடியாது. பிளாக்செயின் நெட்வொர்க் தொழில்நுட்பத்தில் கிரிப்டோகரன்சிகள் உருவாக்கப்படுகின்றன. எந்தவொரு அரசின் தலையீடும் கிரிப்டோகரன்சிகளில் செய்ய முடியாது. கிரிப்டோகரன்சிகளுக்கு எல்லைகளும் கிடையாது. இது முழுவதும் இணையத்தில் இருக்கும். எந்த சட்டவிதிகளும் இல்லாமல் இதன் மூலம் வர்த்தகம் செய்யப்படுகிறது.

இதை அரசோ, ஒழுங்குமுறை அதிகார அமைப்போ வழங்குவதில்லை. டிஜிட்டல் கரன்சி காரணமாக இணைய மோசடிகள் நடப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக, இவ்விவகாரத்தை மத்திய ரிசர்வ் வங்கி இந்த ஆண்டு மீண்டும் எழுப்பியுள்ளது.
2018 ஆம் ஆண்டில், கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளை ஆதரிக்கும் விஷயத்தில், வங்கிகள் மற்றும் முறைப்படுத்தப்பட்ட நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி தடைவிதித்தது.
ஆனால், 2020 மார்ச் மாதத்தில் இந்திய உச்ச நீதிமன்றம் ரிசர்வ் வங்கியின் தடைக்கு எதிராக தீர்ப்பளித்தது. 'இந்த விஷயத்தில் எந்த ஒரு முடிவெடுப்பதற்கும்' அரசு, ஒரு சட்டத்தை உருவாக்க வேண்டும்' என் உச்ச நீதிமன்றம் கூறியது.
இந்தியா தனக்கென ஒரு கிரிப்டோகரன்சி மற்றும் அதன் புழக்கம் தொடர்பான வழிவகைகளை ஆராய்ந்து வருவதாக ரிசர்வ் வங்கி இந்த ஆண்டு மார்ச் மாதம் கூறியது. இந்த நாணயம் இந்தியாவில் எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பது அரசின் எதிர்கால முடிவு குறித்த தொலைநோக்குபார்வை நிர்ணயிப்பதாக இருக்கும்.
கிரிப்டோகரன்சியை எத்தனை இந்தியர்கள் வைத்திருக்கிறார்கள், எத்தனை பேர் அதில் வர்த்தகம் செய்கிறார்கள் என்பதற்கான அதிகாரப்பூர்வ தரவுகள் எதுவும் இல்லை, ஆனால் கோடிக்கணக்கான மக்கள் டிஜிட்டல் கரன்சியில் முதலீடு செய்வதாக தகவல்கள் கூறுகின்றன.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu