தொடர் விடுமுறை காரணமாக வங்கிகளில் அலைமோதும் மக்கள்

தொடர் விடுமுறை காரணமாக வங்கிகளில் அலைமோதும் மக்கள்
X

வங்கியின் முன் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததை காணலாம்

வங்கி செயல்படும் நேரம் குறைப்பு மற்றும் தொடர் விடுமுறை காரணமாக பள்ளிபாளையம் வங்கிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்

நாடு முழுவதும் கொரானா தொற்று அலை வேகமாக பரவி வருவதால் வங்கிகள் உள்ளிட்ட வர்த்தக வணிக நிறுவனங்களுக்கு வேலைநேரம் குறைப்பு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தமிழக அரசும் அந்தந்த மாவட்ட நிர்வாகமும் நடைமுறைபடுத்தி வருகின்றன.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பேருந்து நிறுத்த பகுதியை ஒட்டி ஏராளமான தனியார் மற்றும் அரசு வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. தமிழக அரசு ஏற்கனவே வங்கிகள் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ள நிலையில், இன்று வெள்ளிக்கிழமை வார இறுதி நாள் என்பதாலும், நாளை சனிக்கிழமை மே 1-தொழிலாளர் தினம், ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்கள் வங்கிகள் விடுமுறை என்பதாலும் வங்கி வேலை நேரம் குறைக்கப்பட்டதாலும் வங்கியின் முன் ஏராளமான வாடிக்கையாளர்கள் திரண்டதால் வங்கி ஊழியர்கள் திகைத்துப் போயினர்.

பிறகு சமூக விலகல் விதிகளை கடைப்பிடித்து வங்கியின் உள் வருமாறு அறிவுறுத்திய பிறகு சமூக விலகலுடன் வங்கியின் உள் சென்று பண வர்த்தனை செய்தனர். இதன் காரணமாக பள்ளிபாளையம் - சங்ககிரி சாலையில் வங்கியின் முன் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததை காண முடிந்தது

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்