அதானி குழுமத்துக்கு ரூ.80,000 கோடி கடன்: விபரம் வெளியிட்ட வங்கிகள்

அதானி குழுமத்துக்கு  ரூ.80,000 கோடி கடன்: விபரம் வெளியிட்ட வங்கிகள்
X
அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட கடன் விவரத்தை தெரிவிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது

அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஜன.24-ஆம் தேதி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், பங்குச் சந்தையில் தனது பங்குகளின் மதிப்பை உயர்த்திக் காட்டுவதற்காக அதானி குழுமம் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கையால் இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள அதானி குழுமத்தின் 11 நிறுவன பங்குகளின் விலை கடுமையாக சரிவு கண்டது. இதன் விளைவாக, கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக, உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 3-ஆவது இடத்தில் இருந்த கௌதம் அதானி 15-வது இடத்திற்கு சரிந்துள்ளார். அதானி என்டர்பிரைசஸ் 28.45 சதவீதம், அதானி போர்ட்ஸ் 19.69 சதவீதம், அதானி டோட்டல் கேஸ் 10 சதவீதம், அதானி கிரீன் எனர்ஜி 5.78 சதவீதம் அம்புஜா சிமெண்ட்ஸ் 16.56 சதவீதம் பங்குகள் அடிவாங்கிய நிலையில் ரூ.19.20 லட்சம் கோடியாக இருந்த பங்குகள் தற்போது ரூ.11.76 லட்சம் கோடியாக சரிந்துள்ளது.

இதன் காரணமாக அதானி குழுமத்திற்கு கடந்த 5 நாள்களில் மட்டும் ரூ. 7.44 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது, அதானி குழுமத்தின் மொத்த சொத்து மதிப்பில் மூன்றில் ஒரு பங்காகும்.

இந்தநிலையில், இழப்புகளில் இருந்து முதலீட்டாளர்களை காக்கவே பங்கு விற்பனை ரத்து செய்யப்பட்டது என்றும் பங்கு விற்பனை ரத்து முடிவால் நிறுவனத்தின் எதிர்கால திட்டங்களில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என அதானி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பங்குசந்தைகளில் காணப்பட்ட ஏற்ற, இறக்கத்தால் எப்பி ஓவை தொடர்வது சரியானது அல்ல என முடிவெடுத்துள்ளோம்' என அதானி விளக்கமளித்துள்ளார்.

இந்நிலையில், அதானி குழுமத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு, அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட கடன் விவரத்தை தெரிவிக்க வேண்டும் என அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து ஒவ்வொரு வங்கியும் அதானி குழும நிறுவனங்களுக்கு கடன் வழங்கிய விவரங்களை வெளியிட்டுவருகின்றன.

அதானி குழும நிறுவனங்கள் மொத்தம் வாங்கியுள்ள ரூ. 2 லட்சம் கோடி கடனில் பல்வேறு வங்கிகள் வழங்கிய கடன் மட்டும் ரூ.80,000 கோடி ஆகும். அதன்படி, அதானி குழும நிறுவனங்களின் மொத்த கடன் தொகையான ரூ.2 லட்சம் கோடியில் எஸ்.பி.ஐ அளித்த கடன் தொகை ரூ.21,375 கோடியாகும். இண்டஸ் இண்ட் வங்கி ரூ.14,500 கோடி, பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.7,000 கோடி அதானி குழுமத்துக்கு கடனாக வழங்கியுள்ளன

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil