இந்தியன்ஆயில் நிறுவனத்தின் தமிழ்நாடு தலைவராக பொறுப்பேற்றார் வி.சி.அசோகன்

இந்தியன்ஆயில் நிறுவனத்தின் தமிழ்நாடு தலைவராக பொறுப்பேற்றார் வி.சி.அசோகன்
X
இந்தியன்ஆயில் நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் செயல் இயக்குநர் மற்றும் மாநிலத் தலைவராக வி சி அசோகன் பொறுப்பேற்றார்

வி சி.அசோகன் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் செயல் இயக்குநர் மற்றும் மாநிலத் தலைவராக பொறுப்பேற்றுள்ளார். மேலும் இவர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் எண்ணெய் நிறுவனங்களின் மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளராக பணியாற்றுவார்.

தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் ரீஜினல் இன்ஜினியரிங் காலேஜ், திருச்சிராப்பள்ளி வர்த்தக மேலாண்மைப் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றவர். அசோகன் கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு உத்தரபிரதேசம் குஜராத் போன்ற பல மாநிலங்களிலும் மார்க்கெட்டிங் பிரிவில் பல்வேறு தலைமை பதவிகளையும் வகித்து வந்துள்ளார்.

அசோகன் இந்த பதவியை ஏற்றுக்கொள்ளும் முன் கேரள மாநிலத்தின் செயல் இயக்குநராகவும் மாநில தலைமை பொறுப்பினையும் வகித்துள்ளதோடு அங்கு பல முன்முயற்சிகளுக்கு வழிகாட்டுதல்களையும் அளித்துள்ளார். அவர் பல நாடுகளுக்கு பயணம் செய்துள்ளதோடு எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில் உலக அளவிலான முன்னணி நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து செயலாற்றி வந்துள்ளார்.

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தென் மண்டலதலைமை பொது மேலாளர் (கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ்) வி. வெற்றிசெல்வகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இதனை தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!