போஸ்ட் ஆபீஸ்ல பேமெண்ட் பேங்க் சேவைகளுக்கு ஆகஸ்ட் முதல் கூடுதல் கட்டணம்

போஸ்ட் ஆபீஸ்ல பேமெண்ட் பேங்க் சேவைகளுக்கு ஆகஸ்ட் முதல் கூடுதல் கட்டணம்
X
வாடிக்கையாளர்களுக்கு வங்கி சேவைகளை வழங்க இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் எனும் சேவையை தபால் துறை தொடங்கியது. இதில் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலமாக வங்கி சேவைகளைப் பெறமுடியும்.

போஸ்ட் ஆபீஸ்- பேமெண்ட் பேங்க் சேவைகளுக்கு இன்று முதல் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுதாம். வாடிக்கையாளர்களுக்கு வங்கிச் சேவைகளை வழங்குவதற்காக இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் என்ற வங்கிச் சேவையை தபால் துறை தொடங்கி செயல்படுத்தி வருகிறது. இதில் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலமாக வங்கி சேவைகளைப் பெறமுடியும்.

இந்த பேமெண்ட் பேங்க் சேவையைப் பயன்படுத்துபவர்களுக்கு இன்றிலிருந்து அதாவது, ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் டோர் ஸ்டெப் பேங்கிங் சேவைகளுக்குக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில்தான் வட்டி விகிதங்களை இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் குறைத்திருந்தது. அதற்குள் அதிர்ச்சி தரும் செய்தியாக தற்போது டோர் ஸ்டெப் பேங்கிங் சேவைகளுக்கான கட்டணம் 20 ரூபாய் வரையில் உயர்த்தப்பட்டுள்ளது. பரிவர்த்தனை ஒன்றுக்கு 20 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி சேர்த்து வசூல் செய்யப்படுமாம்.

பணம் வித்டிரா மற்றும் டெபாசிட் செய்வதற்கும் இந்தக் கட்டணம் பொருந்தும். வங்கிக் கணக்குகளுக்கு பணம் அனுப்புவது, சுகன்யா சம்ரிதி யோஜனா, பிபிஎஃப், ஆர்.டி., போன்ற திட்டங்களில் பணம் செலுத்துவது, பில்களுக்கு கட்டணம் செலுத்துவது போன்ற அனைத்து சேவைகளுக்கும் ஜிஎஸ்டியுடன் சேர்த்து 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுமாம்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!