திருப்பூர் மாவட்டத்தில் 8ல் 6 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலை

திருப்பூர் மாவட்டத்தில் 8ல் 6 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலை
X
திருப்பூர் மாவட்டத்தில், மொத்தம் உள்ள 8தொகுதிகளில், 6ல் அதிமுக கூட்டணியே முன்னிலை பெற்றுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில், மொத்தமுள்ள 8தொகுதிகளில் ஆறு தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களே முன்னிலையில் உள்ளனர்.

அதன்படி, திருப்பூர் வடக்கு, அவிநாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் தொகுதிகளில் அதிமுக முன்னிலையில் உள்ளது. தாராபுரம் தொகுதியில், அதிமுக கூட்டணிக்கட்சியான பாஜக சார்பில், எல். முருகன் தொடர்ந்து முன்னிலை பெற்றுள்ளார்.

திமுக வேட்பாளர்கள் இரு தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளனர். அதன்படி, திருப்பூர் தெற்கில் செல்வராஜ், மற்றும் காங்கேயம் தொகுதியில் வெள்ளக்கோவில் சாமிநாதன் ஆகியோர் முன்னிலை பெற்றுள்ளனர்.

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!