3 வேளாண் சட்டங்களும் வாபஸ் - அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் பிரதமர்

3 வேளாண் சட்டங்களும் வாபஸ் - அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் பிரதமர்
X
3 வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்படுவதாக, பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மூன்று வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்படுவதாக, பிரதமர் மோடி அறிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு இன்று காலை உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில், வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். விவசாயிகளுக்கு சேவை செய்வதே அரசின் லட்சியம் என்ற பிரதமர் நரேந்திர மோடி, அவர்களின் நலனுக்காக இந்த முடிவை அரசு மேற்கொண்டுள்ளது என்றார்.

விவசாயிகளை வளர்ச்சியடைய வைப்பதே 3 வேளாண் சட்டங்களின் நோக்கம். 50 ஆண்டுகால பொதுவாழ்க்கையில் நான் விவசாயிகளின் கஷ்டங்கள் மற்றும் சவால்களை மிகவும் அருகில் இருந்து கவனித்துள்ளேன். எனினும், வேளாண்மை சட்டங்களின் நன்மையை சில விவசாயிகளுக்கு புரிய வைக்க முடியவில்லை. சட்டங்களை திரும்பப் பெற அரசு முடிவு செய்துள்ளதால், விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு உடனே வீடுகளுக்கு திரும்பி குடும்பங்களுடன் இணைய வேண்டும் என்றும் பிரதமர் மோடி, தனது உரையில் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த ஆண்டு, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் புதிதாக 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3,ஆம் தேதி முதல், தலைநகர் டெல்லி எல்லையில், ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராடி வருகின்றனர். குடும்பத்துடன் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்ற இப்போராட்டம், நாட்டின் மிக நீண்ட போராட்டங்களுள் ஒன்றாக கருதப்பட்டது. போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில், விவசாயிகள் சிலரும் உயிரிழந்தனர். விரைவில் பஞ்சாப், உத்தரப்பிரதேச மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!