உக்ரைனில் நடந்த குண்டு வீச்சில் இந்திய மருத்துவ மாணவர் பலி
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த 24ஆம் தேதி போர் தொடுத்தது. இந்தப் போர் 7-வது நாளாக நீடித்து வருகிறது .ரஷ்ய ராணுவத்தினர் உக்கிரமாக தாக்கி வரும் இந்த போரில் உக்ரைன் நாட்டின் பல நகரங்களை தங்கள் படை வீரர்கள் பிடித்து விட்டதாக ரஷ்யா அரசு அறிவித்துள்ளது.
ராக்கெட் லாஞ்சர் குண்டுவீச்சில் பல நகரங்கள் தீப்பிடித்து எரிகின்றன. ராணுவ நிலைகளை மட்டுமே தாக்குவதாக ரஷ்யா அறிவித்திருந்தாலும் அப்பாவி மக்களும் பலர் பலியாகி உள்ளனர்.உயிருக்கு பயந்து அந்நாட்டு மக்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகிறார்கள்.
இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் நாட்டில் தங்கியிருந்து மருத்துவம் பயின்று வருகிறார்கள். அவர்கள் கடந்த 6 நாட்களாக தங்களது உயிரை கையில் பிடித்துக் கொண்டு நாட்டின் எல்லைப் பகுதியில் இந்திய நாட்டின் விமான வரவுக்காக காத்து இருக்கிறார்கள். இது தவிர தாங்கள் தங்கியுள்ள இடங்களில் இருந்து வெளியே வர முடியாத மாணவர்கள் பலர் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நவீன் சேகரப்பா என்ற மருத்துவ மாணவர் ரஷ்ய ராணுவத்தின் குண்டு வீச்சில் சிக்கி பலியாகி விட்டதாக தகவல் கிடைத்து உள்ளது. இதை மத்திய அரசும் உறுதி செய்திருப்பதால் ரஷ்ய மற்றும் உக்ரைன் நாட்டு தூதரை நேரில் அழைத்து தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu