ஒலிம்பிக் பளு தூக்கும் போட்டி: இந்தியாவின் மீராபாய் சானுக்கு வெள்ளி

ஒலிம்பிக் பளு தூக்கும் போட்டி: இந்தியாவின் மீராபாய் சானுக்கு வெள்ளி
X
ஒலிம்பிக் பளு தூக்கும் போட்டியில் இந்தியா வீராங்கனை மீரா பாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ஜப்பான் தலை நகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில், இந்தியாவுக்கு இன்று முதலாவது பதக்கம் கிடைத்துள்ளது. மகளிர் பளு தூக்குதலில் இந்தியாவிற்கு வெள்ளிபதக்கம் கிடைத்துள்ளது.

இன்று நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில் இந்தியாவை சேர்ந்த வீராங்கனை மீராபாய் சானு, 49 கிலோ பளு தூக்குதல் போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்று, வெள்ளி பதக்கத்தை தட்டியுள்ளார். இதன் மூலம் நடப்பு ஒலிம்பிக்கில் முதல் பதக்கத்தை வென்ற இந்தியர் என்ற சிறப்பும் மீராபாய்க்கு கிடைத்துள்ளது.

மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்றதற்கு பல்வேறு பிரபலங்களும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். மீராபாய்க்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பதிவில், மீராபாய் சானுவின் அபார திறமையால், இந்தியா மகிழ்ச்சி அடைகிறது. அவரது வெற்றி, இந்தியர் ஒவ்வொருவரையும் ஊக்கப்படுத்தும் என்று கூறியுள்ளார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்