பயங்கரவாதிகளின் கூடாரமாக மேற்கு தொடர்ச்சி மலை: பொன் ராதாகிருஷ்ணன்
செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்.
தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே தனியார் மரக்கடைக்கு தீ வைத்து எரித்த குற்றாவாளிகளை கைது செய்யாமல் காலம் கடத்தி வரும் சம்பவம் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இன்று தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கோபாலசுந்தராஜை சந்திக்க வந்திருந்தார். ஆட்சியரை சந்தித்து பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், முப்படை தளபதி உள்ளிட்ட ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டர் விபத்தில் பரிதாபமாக பலியாகி உள்ளனர். அனைவருக்கும் அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறோம். நாடு இக்கட்டான காலகட்டத்தில் தற்போது உள்ளதாகவும் பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளின் அச்சுறுத்தலை துச்சமாக தூக்கி எறிந்த முப்படை தளபதி இறப்பு பேரிழப்பாகும்.
நாட்டிற்கு இறைவன் அருள் புரிய வேண்டும். ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரணை நடத்த தனி குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும், அந்த குழுவினர் விசாரணை நடத்துவார்கள் என்று தெரிவித்தார்.
மேலும் அந்த விசாரணை குறித்து கருத்து எதுவும் சொல்ல முடியாத நிலையில் உள்ளதாகவும், மேலும் சுப்பிரமணியசாமி கூறிய கருத்துக்கு பதிலளித்த அவர், பலர் பல கருத்துக்களை சொல்லலாம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வைகள் உள்ளன. இதில் பதில் சொல்ல முடியாது என்றும் தெரிவித்தார்.
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் முழுக்க பயங்கரவாதிகளின் பயிற்சி கூடமாக திகழ்கிறது. இதை நான் முந்தைய ஆட்சியின்போது தெரிவித்துள்ளதாகவும், இப்போதும் சொல்கிறேன். இடையூறாக எது இருக்கிறதோ தங்களுக்கு எதிர்ப்பு இல்லாத நிலை உருவாக வேண்டும் என்பதற்காக பல தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
ஒரு கலவரம் நடந்தால் அதன் பாதிப்பு என்ன என்பது அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும். அது போன்ற நிலை இந்த மாவட்டத்தில் வரக்கூடாது. இந்த மாவட்டத்தில் இருந்து மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கும் பரவ விடக்கூடாது எனவே காவல்துறை இதற்கென சிறப்பு புலனாய்வு பிரிவை அமைத்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu