தாம்பரம் அருகே பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் பொங்கல் விழா கொண்டாட்டம்
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த பீர்க்கன்கரணையில் பா.ஜ.க.வினர் ஒன்று திரண்டு பொங்கல் திருநாளை வரவேற்கும் விதமாக பொங்கல் பண்டிகையை சர்க்கரை பொங்கல் வைத்து கொண்டாடினர். இந்த விழாவில் பா.ஜ.க.வின் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் சுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பா.ஜ.க. மகளிரணியுடன் சேர்ந்து பொங்கல் வைத்து கொண்டாடினார்
முன்னதாக மகளிருக்கான வண்ண கோலப் போட்டி வைக்கப்பட்டது. இதில் பா.ஜ.க. மகளிரணி உட்பட ஊர் பெண்கள் பலர் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற அனைத்து மகளிருக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
மேலும் இவ்விழாவில் பொங்கல் வைத்து கும்மியடித்து பாட்டு பாடி மகிழ்ச்சியுடன் பொங்கல் விழாவினை வரவேற்றனர். இந்த விழாவில் முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகளான கீதாமதுமோகன் பங்கேற்று மகளிருடன் கும்மியடித்து பாரம்பரிய நடனமாடினார். இந்த விழாவின் இறுதியில் அலங்கரிக்கப்பட்ட மாட்டுவண்டியில் பா.ஜ.க.வின் மகளிரணியினர் அமர்ந்து ஊரை சுற்றி வந்தனர். உடன் சிறுமியர்கள் மாட்டு வண்டியில் பயணித்து உற்சாக மிகுதியில் மகிழ்ச்சி பொங்கலோ பொங்கல் என உச்சாக கோஷமிட்டவாறு மாட்டு வண்டியில் பயணித்தனர்.
கடந்த ஆண்டுகளில் கொரோனா தொற்று காரணமாக பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாட முடியாமல் மக்கள் வீட்டுக்குள் முடங்கியிருந்த நிலையை இந்த வருடம் மிக மகிழ்ச்சியாக குடும்பத்தாருடன் பொங்கல் விழா கொண்டாட முடியும் என பல தரப்பு மக்களும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த விழாவில் பா.ஜ.க.வின் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பெரும்பாலானவர்கள் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu