Bjp State President Press Meet ஆட்சியாளர்கள் ஒரு மாத நிதிக்கு பதில் களப்பணியாற்ற வேண்டும் :அண்ணாமலை
சென்னையில் மழையால் பாதித்த பகுதிகளை தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை பார்வையிட்டார். உடன் நிர்வாகிகள்.
Bjp State President Press Meet
தமிழக தலைநகரான சென்னையில் மிக்ஜாம் புயலால் பல பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் நீர் புகுந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையானது பல நாட்கள் பாதிப்படைந்துள்ளது. அதுவும் பல பகுதிகளில் இன்றளவில் மழை நீர் வடிந்து காணப்பட்டாலும் இன்று வரை இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. பல பகுதிகளில் மழைநீர் வடியாமல் குளம்போல் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் வர இயலாத சூழ்நிலையே நிலவி வருகிறது.
பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்,அரசியல் கட்சிகள் என வரிந்துகட்டிக்கொண்டு நிவாரண உதவிகளை வழங்கி வந்தாலும் பொதுமக்களுக்கு இன்று வரை இழந்த பொருட்களை மீட்க முடியாமல் அவதிப்பட்டுவருகின்றனர்.
இந்நிலையில் மழையால் பாதிப்படைந்த பகுதிகளை தமிழக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நிர்வாகிகளுடன் சென்று பார்வையிட்ட மக்கள் குறைகளைக் கேட்டறிந்து செய்தியாளர்களுக்கும் பேட்டி அளித்தார்.மழை வெள்ளத்தில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து இருந்தால் அமைச்சர்கள் களத்தில் இருந்திருப்பார்கள்.பொறுப்பு அமைச்சர்கள் களத்தில் இல்லை.இருந்திருந்தால்மக்களின் கோபம் குறைந்து இருக்கும்.
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போன்று,மக்களுக்குதேவை என்பது 234 எம் எல் ஏ,மந்திரிகள் ,சம்பளம் தேவை இல்லை.இவர்களின் சம்பளம் நிவாரண தொகை என்பது ஒரு துளிதான்.எம்.பி ,எம்.எல்.ஏ.மந்திரி சம்பளம் கொடுப்பதை விட களத்திற்கு வந்தால் பிரச்சனை தீரும்.மழை வெள்ளம் குறித்து ஊடகத்தில் சட்டமன்ற உறுப்பினர் கள் பேசுவது மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது.
பாஜக களத்தில் வந்தது மத்திய அரசுக்கும்,துறை சார்ந்த அமைச்சர்களும் பாதிப்பு நிவாரணம் உதவி செய்வதில் பாஜக தெளிவாக உள்ளது.மத்திய அமைச்சரை சந்திக்க உற்பத்தியாளர்கள் வர உள்ளனர்.அவரால் கோரிக்கைகளை நேரடியாக அமைச்சரிடம் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநில அமைச்சருக்கு இந்த பாதிப்புகள் குறித்து எடுத்துரைக்க இங்குவந்துள்ளேன்.
கமல் கருத்துக்கு
கமல் களத்தில் இல்லை,கூலி வேலை செய்பவர்கள்கூட களத்தில் உள்ளனர்.சொல்வது எளிது செய்வது கடினம்.
அண்ணன் கமல் குறித்து கருத்து கூற விரும்பவில்லை.சேவை செய்பவர்கள் களத்தில் உள்ளனர்.
இளைஞர்கள், மென் பொறியாளர்கள் என முகம் தெரியாத பலர்உதவி செய்கின்றனர் . சினிமா நடிகர்களின் ரசிகர்கள் உதவி செய்வது வரவேற்க தக்கது.
சென்னைவாசிகள் சென்னையை விடவில்லை,சென்னைவாசிகளுக்கு பிற மாநிலங்களிலிருந்து வந்து கூட உதவி வருகின்றனர்.
மழை வெள்ள பாதிப்புகள் குறித்து தினந்தோறும் தேசிய தலைமைக்கு மாநில தலைமை சார்பில் அறிக்கை அனுப்பப்பட்டு வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu