/* */

பா.ஜ.க.வில் இணையும் மேலும் ஒரு தமிழ் நடிகை

பா.ஜ.க.வில் மேலும் ஒரு தமிழ் நடிகை இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

HIGHLIGHTS

பா.ஜ.க.வில் இணையும் மேலும் ஒரு தமிழ் நடிகை
X
நடிகை  தமனா

பாரதிய ஜனதா கட்சியில் தமிழ் நடிகைகள் பலர் தொடர்ந்து இணைந்து வருகிறார்கள். குஷ்பு, கவுதமி, காயத்திரி ரகுராம் உள்பட பல தமிழ் நடிகைகள் பா.ஜ.க.வில் இணைந்து கட்சி பணியாற்றி வருகிறார்கள். தேர்தல் நேரத்தில் அவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பா.ஜ.க.வை ஆதரித்து பிரசாரம் செய்தனர். தமிழகத்தில் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்ற திட்டத்தில் கட்சி தலைமையும் நடிகர், நடிகைகளை கட்சியில் இணைத்துவருகிறார்கள்.

இந்த நிலையில் தமிழ் நடிகை தமனாவும் பா.ஜ.க.வில் சேர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரைப்பட உலகில் கேடி படம் மூலம் அறிமுகமானார் தமனா. கல்லூரி திரைப்படம் தமனாவுக்கு சிறப்பு அங்கீகாரம் கொடுத்தது. இதையடுத்து நடிகர் தனுசுடன் படிக்காதவன், சூர்யாவுடன் அயன்,விஜய்யுடன் சுறா ஆகிய படங்களில் நடித்தார். கண்டேன் காதலை, ஆனந்த தாண்டவம், பையா முதலிய படங்களிலும் நடித்துள்ளார்.தமிழ் ,தெலுங்கு , கன்னடம், மராத்தி, இந்தி ஆகிய மொழிகளில் மொத்தம் 70 க்கும் மேற்பட்ட படங்களிலும் கதாநாயகியாக நடித்துள்ளார் .இவர் சிந்தி இனத்தைச் சேர்ந்தவர்.

2015 ஆம் ஆண்டு ராஜமவுளி இயக்கத்தில் பாகுபலி படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடித்தார்.அந்த படம் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,கன்னடம்,மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்து 600 கோடி வசூலைக் குவித்தது.சீனாவிலும் அப்படம் வெளியானது.தமனாவிற்கும் பாராட்டுக்கள் குவிந்தன. சீனு ராமசாமி இயக்கத்தில் விஜயசேதுபதி ஜோடியாக நடித்த தர்மதுரை படம் 100 நாட்கள் ஓடி வெற்றிப்படமாக அமைந்து.

இந்த நிலையில் மும்பையில் பா.ஜ.க. சார்பில் சமீபத்தில் நவராத்திரி விழா பிரமாண்டமாக நடத்தப்பட்டது. இதில் மகாராஷ்டிரா துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் பா.ஜ.க. பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நடிகை தமனாவும் கலந்து கொண்டது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. இந்த விழாவில் கட்சி பிரமுகர்களிடம் நடிகை தமனா சகஜமாக பேசிக்கொண்டு இருந்தார். அவர் பா.ஜ.க.வில் விரைவில் இணையப்போகிறார் என்று அங்கு பரபரப்பாக பேசப்பட்டது.

தமனா தமிழ் படங்களில் அதிக எண்ணிக்கையில் நடித்துள்ளார். தமிழக மக்களுக்கு அவர் நன்கு அறிமுகம் ஆனவர். தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்தில் தான் கட்சியை பலப்படுத்தும் முயற்சியில் அகில இந்திய பா.ஜ.க. தலைமை தீவிரமாக இறங்கி உஎள்ளது. இதற்காக தி.மு.க., அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை தமிழக பா.ஜ.க. வில் சேர்த்து வருகிறார்கள். அந்த வகைவில் தமிழக பா.ஜ.க. வில் தான் நடிகை தமனா இணைவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்காக அவர் எந்த நேரத்திலும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை சந்திப்பார் என்றும் கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது. அவர் கட்சியில் சேர்ந்தால் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பா.ஜ.க.வுக்கு ஆதரவு திரட்டுவார் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசிவருகிறார்கள்

Updated On: 6 Oct 2022 1:16 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு