/* */

பா.ஜ.க. தொண்டர்களை குஷிப்படுத்திய நடிகை குஷ்பு..!

ஐதராபாத் நகரில் கூடியுள்ள பா.ஜ.க தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற நடிகை குஷ்பு, கலைஞர்களுடன் சேர்ந்து கோலாட்டம் ஆடி, தொண்டர்களை மகிழ்ச்சிப்படுத்தினார்.

HIGHLIGHTS

பா.ஜ.க. தொண்டர்களை குஷிப்படுத்திய நடிகை குஷ்பு..!
X

பா.ஜ.க பிரமுகரும், நடிகையுமான குஷ்பு.

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. நாட்டில் நிலவும் பொதுவான அரசியல், மாநிலங்களில் கட்சி வளர்ச்சி, கூட்டணி வியூகம் என்பது உள்ளிட்ட விவகாரங்கள் ஆலோசிக்கப்படுகிறது. மத்தியில் பிரதமர் மோடி தலைமையின் கீழ் 8 ஆண்டுகள் ஆட்சி நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் கட்சியை வலுப்படுத்தவும், பலவீனமாக உள்ள மாநிலங்கள் குறித்தும் செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனவும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

இந்த கூட்டத்தில், பா.ஜ., ஆளும் முதல்வர்கள், மூத்த தலைவர்களான அமித்ஷா, நிதின்கட்காரி ,வசுந்த்ரா ராஜே, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். நாளை ஜூன்-3 நடக்கும் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரை நிகழ்த்துகிறார். தெலுங்கானாவில் ஆட்சியை பிடிக்க முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்தில் பங்கேற்க வந்த நிர்வாகிகளுக்கு தெலுங்கானாவில் புகழ் பெற்ற முத்து மாலை அணிவிக்கப்பட்டது.

முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள் கூட்ட வாயிலுக்கு வரும் போதும் பெண்கள் கோலாட்டம் ஆடி வரவேற்றனர். இதனை பார்த்த பா.ஜ.க பிரமுகரும், நடிகையுமான குஷ்பு, தெலுங்கானா கலாசார கலைஞர்களுடன் தானும் சேர்ந்து கோலாட்டம் ஆடினார். இதனைப்பார்த்த தொண்டர்கள், நிர்வாகிகள் புகைப்படம், வீடியோ எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Updated On: 4 July 2022 11:03 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    வணிகர் சங்க பேரமைப்பு: சத்தியில் துவக்க விழா ஆலோசனைக் கூட்டம்
  2. இந்தியா
    மிசோரம் கல்குவாரியில் பாறை சரிந்து 14 பேர் பலி
  3. ஆன்மீகம்
    வெந்நீர் அபிஷேகம் நடக்கும் அதிசய சிவன் கோவில்!
  4. லைஃப்ஸ்டைல்
    கடனாகக் கொடுக்கக் கூடாத பொருட்கள் எவை தெரியுமா?
  5. சோழவந்தான்
    வாடிப்பட்டி அருகே ,கத்தியை காட்டி மிரட்டி வியாபாரிடம் வழிப்பறி; மூன்று...
  6. சோழவந்தான்
    வாடிப்பட்டி அருகே மூதாட்டி கொலை; பேரனை தேடும் போலீசார்
  7. கல்வி
    கல்விக் கடன் பெறத் திட்டமிடும் மாணவர்களுக்கு முக்கியம்
  8. வீடியோ
    Stalin ஆட்சி - Kamarajar ஆட்சி Comparison பண்றதா ?#mkstalin #dmk...
  9. கிணத்துக்கடவு
    மதுக்கரையில் 5 கிலோ கஞ்சா சாக்லேட்கள் பறிமுதல்
  10. லைஃப்ஸ்டைல்
    சப்பாத்தியை இனிமேல் நெய்யுடன் சாப்பிடுங்க!