யெஸ்டி பைக்குகள் மீண்டும் வருகிறது

யெஸ்டி பைக்குகள் மீண்டும் வருகிறது
X
கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் யெஸ்டி பைக்குகளை மீண்டும் கொண்டு வருவதாக அறிவித்திருந்தது.

நவம்பர் 2018 இல், கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் யெஸ்டி பைக்குகளை மீண்டும் கொண்டு வருவதாக அறிவித்திருந்தது. ரோட்கிங் என்ற பெயர் மற்றும் யெஸ்டிரோட்கிங்.காம் என்ற இணையதளத்திற்கு விண்ணப்பித்திருந்தது. .

பழையதை போல மீண்டும் உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கிளாசிக் லெஜண்ட்ஸ் செய்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்புதான், சோதனை ஓட்டம் நடந்தது. ஜாவா ஸ்க்ராம்ப்ளரைப் போல ஒரே மாதிரியான ரேடியேட்டர் மற்றும் என்ஜின் வடிவமைப்பைக் கொண்டிருந்தாலும், தனித்துவமான யெஸ்டி கோடுகளைக் கொண்டிருந்தது.

கொரோனா காரணமாக திட்டங்கள் தாமதமாகி வருகிறது, வர்த்தக முத்திரை பயன்பாடுகளும் இன்னும் கிடைக்கவில்லை, இவை அனைத்தும் கிடைத்தவுடன் இந்த ஆண்டு யெஸ்டி பிராண்டை அறிமுகப்படுத்தப்படும் என தெரிகிறது.

Tags

Next Story
அதிர்ச்சி சம்பவம்: வெள்ளித்திருப்பூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் - சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பொதுமக்கள் அச்சம்