மீண்டும் ஃபோக்ஸ்வாகன் டிகுவான் 5 சீட்டர்

மீண்டும் ஃபோக்ஸ்வாகன் டிகுவான் 5 சீட்டர்
X
புதிய BS-6 மாசுக்கட்டுப்பாட்டு விதிகளுக்கு ஏற்ப மீண்டும் ஃபோக்ஸ்வாகன் டிகுவான் 5 சீட்டரை ஃபோக்ஸ்வாகன் அறிமுகப்படுத்தியுள்ளது

ஐந்து பேர் உட்காரக் கூடியதாக இருந்த ஃபோக்ஸ்வாகன் டிகுவானில், சில மாற்றங்களைச் செய்து புதிய BS-6 மாசுக்கட்டுப்பாட்டு விதிகளுக்கு ஏற்ப அதை 7 சீட்டராக மாற்றி, `டிகுவான் ஆல் ஸ்பேஸ்' என்று பெயரில் அறிமுகப்படுத்தியது ஃபோக்ஸ்வாகன். இப்போது மீண்டும் 5 சீட்டர் டிகுவானை அறிமுகப்படுத்த இருக்கிறது.

இந்த 5 சீட்டர் காரில் டீசல் இன்ஜின் இல்லை. பெட்ரோல் இன்ஜின். பெரும்பாலும் நம் நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் உதிரிபாகங்களைக் கொண்டு இது அசெம்பிள் செய்யப்பட இருக்கிறது என்பதால், இதன் விலை குறைவாக இருக்கும் என்று நம்பலாம்.

இப்போது விற்பனையில் இருக்கும் டிகுவான் ஆல் ஸ்பேஸுக்கும், புதிதாக அறிமுகமாக இருக்கும் 5 சீட்டர் டிகுவானுக்கும் என்ன வித்தியாசம்

கிரில், பம்பர் டிசைன் மற்றும் LED ஹெட்லைட்ஸ் ஆகியவற்றின் டிசைன்களை மாற்றியிருக்கிறார்கள். திருப்பங்களில் வாகனத்தை ஓட்டும்போது, சாலையில் வெளிச்சம் விழும் வகையில் இதன் ஹெட்லைட்ஸ் திரும்பும் என்பது புதிய அம்சம். ஃபோக்ஸ்வாகனின் புதிய லோகோவை இதன் முகப்பில் வைத்திருக்கிறார்கள்.

இது 5 சீட்டர் என்பதால், இதன் பின்புறத்தை அதற்கு ஏற்ப மாற்றம் செய்திருக்கிறார்கள். 18 இன்ச் அலாய்வீலும், அதற்கு மேலே இருக்கும் வீல் ஆர்ச்சும் கம்பீரமாக உள்ளது. டெயில் லைட்டும் மாறியிருக்கிறது. பின் பக்கம் ரிவர்ஸ் பார்க்கிங் சென்ஸார் இருக்கிறது.

இன்டீரியர்: பனோரமிக் சன்ரூஃப், 3 ஸோன் ஆட்டோமேட்டிக் ஏசி ஆகியவற்றோடு, புதிய டிஜிட்டல் க்ளஸ்ட்டர் ஆகியவை ஆச்சரியமூட்டக் கூடியதாக இருக்கும். பெரிய டச் ஸ்கிரீன் மற்றும் கனெக்டட் கார் தொழில்நுட்பம் போல, இதிலும் சிலவற்றை நிச்சயம் எதிர்பாக்கலாம்.

இன்ஜின்: 190 bhp ,32 kgm டார்க் 2.0 லிட்டர் TSI இன்ஜின். இது ஃப்ரன்ட் வீல் டிரைவ் வாகனமாக இருக்கும்.

இந்தியா 2.0 திட்டத்தின்படி ஃபோக்ஸ்வாகன் பல புதிய முயற்சிகளை எடுத்திருப்பதாக தெரிகிறது. சர்வீஸ், உதிரிபாகங்களுக்கு ஆகும் செலவு எனத் துவங்கி, சர்வீஸ் விஷயத்தில் ஃபோக்ஸ்வாகன் வாடிக்கையாளர்கள் முழுமையாகத் திருப்தியடையவில்லை என்பதால் சர்வீஸ் சென்டர்களில் பல மாற்றங்களைச் செய்திருக்கிறது. ஃபோக்ஸ்வாகன் ஷோரூமின் முகப்பில் துவங்கி உள்ளலங்காரம் வரை அனைத்தையும் மாற்ற அது முயற்சி எடுத்து வருகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!