உலகின் விலையுயர்ந்த ரோல்ஸ்-ராய்ஸ் கார்: வெறும் 200 கோடி மட்டுமே
தற்போது வரையில் ஸ்வெப்டெயில் என்ற கார் தான் விலையுயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் காராக இருந்து வந்தது. இந்திய ரூபாயில் அதன் விலை 92.71 கோடி ரூபாயாகும்.
கிட்டத்தட்ட 4 வருடங்களாக ரோல்ஸ் ராய்ஸின் முதன்மை வடிவமைப்பாளர்கள் மூவர் தற்போது போட் டெயில் (Boat Tail) என்ற மாடலை உருவாக்கி வந்துள்ளனர்.
போட் டெயிலும், முந்தைய ஸ்வெப்ட் டெயிலும் ஐரோப்பிய வாடிக்கையாளர்களின் ரசனைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. போட் டெயிலின் பெயருக்கு ஏற்ப அதன் பின்பகுதி கிட்டத்தட்ட வேகமாக செல்லும் படகை போல் காட்சியளிக்கிறது.
காரின் பின்பகுதியில் பொருட்களை வைப்பதற்காக அழகான இரு பகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. சென்ட்ரல் கன்சோல் பகுதியில் பாட்டில்கள் மற்றும் கிளாஸ்களை வைப்பதற்கான கூலர் வழங்கப்பட்டுள்ளது.
உரிமையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றங்களை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
200 கோடி ரூபாய்க்கும் அதிகமான விலை என்பதால் காரில் பொருத்தப்பட்டுள்ள சிறு சிறு பாகங்கள் கூட மிகவும் கவனத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.
உட்புற கேபின் வெப்பமடையாத வகையில் ஜன்னல் கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன. உணவு பொருட்களை வைப்பதற்கு ட்ரே-வும், ஸ்விஸ் நாட்டை சேர்ந்த போவே 1822 பிராண்ட் கடிகாரமும் போட் டெயிலில் வழங்கப்பட்டுள்ளன.
15-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டமும் உள்ளது. காரை சவுண்ட் பாக்ஸாக மாற்றிக்கொள்ளலாம்.
வி12 6.75 லிட்டர் பை-டர்போ என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 563எச்பி திறனை வெளிப்படுத்தக்கூடியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu