புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா பத்தி எல்லா விபரங்களும் உங்களுக்காக

புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா பத்தி எல்லா விபரங்களும் உங்களுக்காக
X

ஹுண்டாய் வெர்னா 

ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் புதிய தலைமுறை வெர்னாவை இன்று இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது,

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் புதிய தலைமுறை வெர்னா மாடலை மார்ச் 21 ஆம் தேதி அறிமுகம் செய்கிறது. கடந்த சில வாரங்களாக முற்றிலும் புதிய மிட்-சைஸ் செடான் மாடலுக்கான டீசர்களை ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்டு வருகிறது.


2023 ஹூண்டாய் வெர்னா மாடல் முற்றிலும் புதிய டிசைனால் வடிவமைக்கப்பட்டுள்ளது. வெளிப்புறம் புதிய தலைமுறை வெர்னா மாடல் ஸ்போர்ட் டிசைன் கொண்டுள்ளது. இந்த மாடல் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் எலான்ட்ரா காரை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. காரின் முன்புறம் பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்ட கிரில், கூர்மையான எல்இடி ஹெட்லேம்ப்கள், ஸ்போர்ட் பம்ப்பர் உள்ளது.

இத்துடன் ரிடிசைன் செய்யப்பட்ட பானெட், எல்இடி லைட்டிங் சிஸ்டம், பக்கவாட்டில் கேரக்டர் லைன், முற்றிலும் புதிய அலாய் வீல்கள், ஃபாஸ்ட்-பேக் ஸ்டைல் ரூஃப்லைன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் கனெக்டெட் எல்இடி டெயில் லேம்ப்கள், பெரிய ஸ்பாயிலர், ரிவைஸ்டு ரியர் பம்ப்பர் உள்ளது.



2023 ஹூண்டாய் வெர்னா மாடல் EX, S, SX மற்றும் SX(O) என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கும்.

புதிய தலைமுறை வெர்னா மாடலின் உள்புறம் அளவில் பெரிய டச்ஸ்கிரீன் வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், வளைந்த டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர் வழங்கப்படுகிறது.

இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் ஏசி சுவிட்ச் கன்ட்ரோலர், 64-வண்ண சுற்றுப்புற விளக்குகள், ஹீட் மற்றும் கூல்டு இருக்கைகள், பவர் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் இருக்கை, எலக்ட்ரிக் சன்ரூஃப், ஸ்மார்ட் ட்ரங்க், 10.25-இன்ச் எச்டி டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், போஸ் பிரீமியம் ஆடியோ சிஸ்டம், புளூலிங்க் இணைக்கப்பட்டுள்ளது.

புதிய ஹூண்டாய் வெர்னா மாடலில் 1.5 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 160 பிஎஸ் பவர், 253 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறன். இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் மற்றும் 7 ஸ்பீடு DCT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இது 0 முதல் 100 கிமீ வேகத்தை வெறும் 8.2 வினாடிகளில் எட்டி விடும்.


10.9 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) அறிமுக விலையுடன், ஹூண்டாய் வெர்னா அதன் அனைத்து போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது (ஸ்கோடா ஸ்லாவியா, ஹோண்டா சிட்டி, வோக்ஸ்வேகன் விர்டஸ்) மாருதி சுசுகி சியாஸைத் தவிர குறைவான அடிப்படை விலையைக் கொண்டுள்ளது.

புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னாவின் அறிமுக விலையானது ரூ.10.89 லட்சத்தில் இருந்து ரூ.17.38 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) வரை விற்பனை செய்யப்படுகிறது.

2022 ஆம் ஆண்டு முதல் அனைத்து ஹூண்டாய் வெர்னா வாங்குபவர்களில் 41% பேர் 30 வயதுக்கும் குறைவானவர்கள் என்று ஹூண்டாய் கூறுகிறது. இந்தியாவில் இதுவரை 4.65 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!