பைக் வைத்திருப்பவர்கள் இதையெல்லாம் கொஞ்சம் கவனிக்கவும்

பைக் வைத்திருப்பவர்கள் இதையெல்லாம் கொஞ்சம் கவனிக்கவும்
X
பைக் வைத்திருப்பவர்கள் வண்டியை சரியாக பராமரிக்க பின்வரும் டிப்ஸ்களை கொஞ்சம் பின்பற்றினால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம்
  • சைலன்ஸரில் இருந்து வெள்ளைப் புகை வந்தால், பைக் அதிகமாக ஆயில் குடிக்கிறது, இன்ஜினில் பிரச்சினை என்று அர்த்தம். உடனடியாக சர்வீஸ் செய்யவேண்டும்.
  • இதுவே கறுப்பாக புகை வந்தால், ஏர் ஃபில்டர் நிச்சயம் மாற்ற வேண்டும் என அர்த்தம். இல்லையெனில் மைலேஜ் குறையும்..
  • பைக்குகளின் டயரில் ஏர் ப்ரஷர் அதிகம் இருந்தாலும் ஸ்கிட் ஆகும். குறைவாக இருந்தால் டயர் தேயும். மைலேஜ் அடி வாங்கும். எனவே ஏர் ப்ரஷர் சரியாக இருக்க வேண்டியது முக்கியம்.
  • இன்ஜின் ஆயில் மாற்றுவதுபோல, சரியான நேரத்தில் பர்ஸ்ட் எய்ட் கிட்டை மாற்ற வேண்டும்.
  • மழைக் காலங்களில் மட்டும் பிரீமியம் பெட்ரோல் பயன்படுத்தலாம். சாதாரண பெட்ரோல் விட இதில் ஆக்டேன் அளவு அதிகமா இருப்பதால், ஏர் - ஃப்யூல் மிக்சிங் சரியா இருக்கும்.
  • பிரேக்கை இரண்டு வருஷத்துக்கு ஒரு முறை மாற்றவேண்டும். பிரேக்கில் பிரச்சனை வந்தபின் பார்த்துக்கலாம் என்று நினைப்பது தவறு
  • உயரமாக இருப்பவர்கள் ஸ்கூட்டர் வாங்கும்போது, சீட் உயரம் அதிகம் இருக்கும் ஸ்கூட்டர்களைத் தேர்வு செய்தால், ஓட்டுவது சுலபமாக இருக்கும்.

Tags

Next Story
அதிர்ச்சி சம்பவம்: வெள்ளித்திருப்பூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் - சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பொதுமக்கள் அச்சம்