/* */

ஃபெராரி ரோமா சூப்பர் கார் இந்தியாவில் அறிமுகம்

ரோமா சூப்பர் காரை ஃபெராரி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

HIGHLIGHTS

ஃபெராரி  ரோமா சூப்பர் கார்  இந்தியாவில் அறிமுகம்
X

ஃபெராரி நிறுவனத்தின் உலக புகழ்பெற்ற கார் மாடல்களில் ரோமா-வும் ஒன்று. இந்த சூப்பர் காரையே நிறுவனம் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

ஃபெராரி ரோமா காரில் அடாப்டீவ் எல்இடி ஹெட்லேம்ப், சுறா மூக்கு வடிவிலான முகப்பு பகுதி, குவாட் எல்இடி, எல்இடி வால் பகுதி விளக்கு, மூன்று விதமான மோட்களில் இயங்கக் கூடிய பின் பகுதி ஸ்பாய்லர் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கின்றன.

காருக்குள் 16 இன்சிலான முழு டிஜிட்டல் திறன் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், மூன்று ஸ்போக் கொண்ட ஸ்டியரிங் வீல், கன்சோலின் மையப்பகுதியில் தொடுதிரை வசதியுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் பயணிகளுக்கான தனி திரை உள்ளிட்டவையும் ஃபெராரி ரோமா சூப்பர் காரில் இடம் பெற்றிருக்கின்றன.

3.9 லிட்டர் டர்போ சார்ஜட் வி8 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 612 பிஎச்பி மற்றும் 760 என்எம் டார்க்கை வெளியேற்றும்

100கிமீ எனும் வேகத்தை வெறும் 3.4 செகண்டுகளிலேயே தொட்டுவிடும் திறன் கொண்டது. அதேசமயம், மணிக்கு 200 கிமீ வேகத்தை 9.3 செகண்டுகளில் தொட்டுவிடும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 320 கிமீ ஆகும்.

வீல் பேஸ் 2,670 மிமீ ; நீளம் 4,656மிமீ, அகலம் 1,974 மிமீ

ஃபெராரி ரோமா காரின் ஆரம்ப விலை ரூ. 3.76 கோடி ஆகும். இந்த விலை வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 9 July 2021 8:55 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை: பகவான் ரமண மகரிஷி ஆராதனை விழா
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே பர்கூரில் தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்து சென்ற...
  4. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  6. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  7. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  8. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  9. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  10. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு