சிஎஃப் மோட்டோ 250எஸ்ஆர் ரேசிங் எடிசன் பைக் இப்போது இந்தியாவில்

சிஎஃப் மோட்டோ 250எஸ்ஆர் ரேசிங் எடிசன் பைக் இப்போது இந்தியாவில்
X

சிஎஃப் மோட்டோ 250எஸ்ஆர் ரேசிங் எடிசன் பைக்

சீனாவில் பிரபலமான மோட்டார்சைக்கிள் பிராண்டான சிஎஃப் மோட்டோ தற்போது இந்தியாவிலும் கால் பதிக்கிறது.

சீனாவில் பிரபலமான மோட்டார்சைக்கிள் பிராண்டான சிஎஃப் மோட்டோ. சீனா மட்டுமில்லாமல் வேறு சில வெளிநாடுகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்த வகையில் இந்திய சந்தையில் களமிறங்க இந்த சீன மோட்டார்சைக்கிள் பிராண்ட் கடந்த சில வருடங்களாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன் விளைவாக சில பைக் மாடல்களை சிஎஃப் மோட்டோ இந்தியாவில் சில மாதங்களாக விற்பனை செய்துவருகிறது.

ரேசிங் எடிசன் என்றாலே பொதுவாக ட்ராக் ரேஸ் பைக்குகளுக்கு செயல்திறனை மேம்படுத்தும் வகையில் சஸ்பென்ஷன் அமைப்பிலும் அப்கிரேடை பெற்றுள்ளது.

இதன் சஸ்பென்ஷன் அமைப்பில் கயாபாவின் 37மிமீ முன்பக்க ஃபோர்க்குகள் மற்றும் பின்பக்க மோனோ-ஷாக் உள்ளது.

சிஎஃப் மோட்டோ 250எஸ்ஆர் பைக்கில் இரட்டை-ஹெட்லேம்ப், எல்இடி இண்டிகேட்டர்கள், எல்இடி டெயில்லைட், முன்பக்க டூமில் பொருத்தப்பட்ட ரியர்வியு கண்ணாடிகள் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை உள்ளது..

249.2சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்யூடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 9,750 ஆர்பிஎம்-ல் 27.5 பிஎச்பி மற்றும் 7,500 ஆர்பிஎம்-ல் 22 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!