2023 ஃபிளாஷ்பேக் : இந்த ஆண்டு அறிமுகமான டாப் இருசக்கர வாகனங்கள்
2023 ஆண்டு இந்திய சந்தையில் இருசக்கர வாகன பிரியர்களுக்கு சிறப்பான ஒன்றாக அமைந்தது. பழைய பிராண்டுகளில் துவங்கி பிரீமியம் பிராண்டுகள் வரை சிங்கிள் சிலிண்டர் மற்றும் டுவின் சிலிண்டர் இன்ஜின் கொண்ட வாகனங்கள் பிரிவில் களமிறங்கின.
வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் வழக்கமான பாணியை தவிர்த்து, வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டன. குறைந்த விலை மாடல்கள் மட்டுமின்றி பிரீமியம் மற்றும் ஃபிளாக் ஷிப் பிரிவில் இருசக்கர வாகன சந்தை, முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது கணிசமான வளர்ச்சியை பதிவு செய்தன.
அந்த வகையில், இந்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களில் டாப் மோட்டார்சைக்கிள் மாடல்கள் பட்டியலை பார்ப்போம்.
ராயல் என்பீல்டு ஹிமாலயன்:
புதிய தலைமுறை ஹிமாலயன் மோட்டார்சைக்கிளை ராயல் என்பீல்டு நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்த மாடல் முற்றிலும் புதிய ஷெர்பா 450 இன்ஜின் கொண்டிருக்கிறது. ராயல் என்பீல்டு உருவாக்கியதிலேயே அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட மாடலாக புதிய ஹிமாலயன் அமைந்தது. இந்திய சந்தையில் இந்த மாடலின் விலை ரூ. 2, 69, 000 எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது.
டிரையம்ப் 400 சீரிஸ்:
டிரையம்ப் நிறுவனத்தின் 400 டுவின்ஸ் மாடல்களை பஜாஜ் ஆட்டோ உற்பத்தி செய்தது. இந்த மாடல்களில் 400சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் இந்த மாடலின் விலை ரூ. 2,23,000 என்று துவங்குகிறது.
கே.டி.எம். 390 டியூக்:
புதிய தலைமுறை கே.டி.எம். 390 டியூக் மாடல் அதிகளவு மாற்றங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் மேம்பட்ட இன்ஜின், ரைடர் எலெக்டிரானிக்ஸ், முழுமையாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய சஸ்பென்ஷன் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்க அம்சங்களாக இருக்கின்றன. இதன் விலை ரூ. 3, 11,000, எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஹார்லி டேவிட்சன் X440:
ஹார்லி டேவிட்சன் இதுவரை உருவாக்கியதிலேயே சிறிய மாடல் இது ஆகும். பட்ஜெட் அடிப்படையிலும் இந்த மாடல் ஹார்லியின் குறைந்த விலை மோட்டார்சைக்கிள் ஆகும். இதில் 440 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்/ஆயில் கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் இந்த மாடலின் விலை ரூ. 2, 39,000 எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
டி.வி.எஸ். அபாச்சி RTR 310:
டி.வி.எஸ். நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மோட்டார்சைக்கிளாக அபாச்சி RTR 310 அறிமுகம் செய்யப்பட்டது. நேக்கட் ஸ்டிரீட்ஃபைட்டர் மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கும் அபாச்சி RTR 310 மாடலில் 312 சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்விட் கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் இந்த மாடலின் விலை ரூ. 2, 43, 000, எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu