இயக்குநர் ஷங்கரின் ஜாதகம் எப்படி உள்ளது? பார்க்கலாமா
இயக்குனர் ஷங்கர் ஜாதகம்
உழைப்பு என்கிற விஷயம் நம்மிடம்தான் இருக்கிறது அதற்கு பலன் தரும் புகழ் என்பது இறைவன் நமக்கு வரமாக தருவது. ஆனாலும் புகழ் என்பது வெறும் பெயரோடு நின்றுவிடாமல் அந்த புகழுக்குரிய பண வசதியும் இருந்தால்தான் புகழுக்கும் மரியாதை கிடைக்கும். அப்படி பொருளும் பெருமையையும் தருகிற புகழ் சிலருக்கே சாத்தியமாகிறது. அந்த வகையில் இந்த பகுதியில் நாம் இயக்குனர் ஷங்கரின் ஜாதக அமைப்பை ஆராய இருக்கிறோம்.
பிறந்த தேதி 17.08.1963. பிறந்த எண்ணும் 8. தேதி-மாதம்-வருடம் கூட்டு எண்ணும் 8.
பெயர் ஆங்கிலத்தில் SHANKAR – பெயர் எண் 19. ஆதிக்கம் சூரியன்.
ஜாதகத்தில், ஆட்சி பெற்ற சூரியனின் ஆதிக்கத்தில் பெயர் எண் அமைந்துள்ளது. இது அரசியல் – அரசாங்க விஷயங்களிலும் சாதகமான நிலையை தரும்.
ஜாதகம் யோகமாக இருந்து, அத்துடன் பெயர் எண்ணும் சரியாக அமைந்துவிட்டால் அவர்களுக்கு அந்தஸ்தான வாழ்க்கை அமைந்தது விடும். போராடினாலும் நிச்சயம் அதற்கான பலனை தந்துவிடும்
ஏழ்மையில் இருந்து உயர்ந்த அந்தஸ்துக்கு வந்த பலரை போல, ஷங்கரின் ஆரம்ப கால வாழ்க்கையும் மிக மிக சுமாரானதுதான்.
ஒரு நகைச்சுவை நடிகனாக புகழ் பெற வேண்டும் என்றுதான் அவரின் சினிமா முயற்சிகள் இருந்தது. சினிமாவில் காமெடி நடிகராக நுழைவதற்கு எளிய வழியாக இருக்கும் என்றுதான் உதவி இயக்குனராக சேர்ந்திருக்கிறார். ஆனால் அவரை மாபெரும் திரைப்பட இயக்குனராக மாற்றியது சந்தர்ப்பங்கள்.
இன்று இயக்குனர் ஷங்கரை தெரியாதவர்கள் இல்லை. இப்படி மக்கள் மத்தியில் புகழ் பெற காரணம் என்ன? மக்கள் மத்தியில் புகழ் பெற செய்த யோகங்கள், இவருடைய ஜாதகத்தில் அப்படி என்ன இருக்கிறது.?
கடக இராசி – துலா லக்கினத்தில் பிறந்தவர் ஷங்கர். ஒருவருடைய ஜாதகத்தில் லக்கினாதிபதி 10-ல் இருந்தாலோ அல்லது சனி 10-யை பார்த்தாலோ, சனி 10-ல் இருந்தாலோ மக்கள் மத்தியில் புகழ் பெறுவார்கள்.
ஷங்கர் ஜாதகத்தில், லக்கினத்திற்கு 3-ல் கேது. அதாவது புகழ்-கீர்த்தி ஸ்தானத்தில் கேது. அது செவ்வாயின் பார்வையில் அமைந்திருக்கிறது. ஆரம்பத்தில் நிறைய சங்கடமான நிலைகளை தந்தாலும், பின்னர் இதே ஞானக்காரகனான கேது, புதிய சிந்தனைகளை தந்து நல்ல சந்தர்ப்பங்களை உருவாக்கி புகழ், கீர்த்தியை வழங்கியது.
பொதுவாகவே ஒருவரின் ஜாதகத்தில் சுகஸ்தானம் என்கிற லக்கினத்திற்கு 4-ம் இடத்தில் சனி அமைய பெற்றவர்கள் பட்ட துயரங்கள், துன்பங்களின் வலி அவர்களுக்கு மட்டுமே தெரியும். ஆனால் அதே சனி 4-ல் அமைந்து ஜாதகத்தில் 10-ம் இடத்தை, பார்தத்தால் மக்கள் மத்தியில் இன்று புகழ் பெற்று விளங்குகிறார்.
அதுமட்டுமல்ல, இவரின் ஜாதகத்தில் இதே 10-ம் இடத்தை, 6-ல் அமர்ந்த குரு பார்க்கிறார் . தொழில்ஸ்தானமான 10-ம் வீட்டில் லக்கினாதிபதியான சுக்கிரன், ஆட்சி பெற்ற சந்திரனுடன் இணைந்து அமர்ந்து, குருவின் பார்வையை பெறுகிறார்கள். குரு பார்க்க கோடி புண்ணியம் என்கிற ஜோதிட வாக்குக்கு ஏற்ப நற்பலன்கள் அமைந்து, அந்த சிறப்புடன் கஜகேசரியோகம், குரு-சுக்கிர யோகமும் கூட்டு சேர்ந்தது.
அத்துடன் அவரின் ஜாதகத்தில், லாபஸ்தானம் என்கிற 11-ம் இடத்தில் ஆட்சி பெற்ற சூரியனும், பாக்கியாதிபதியான புதனும் இணைந்துள்ளனர். இந்த கிரக நிலைக்கு புதஆதித்ய யோகம் என்று பெயர். ஒருவரின் ஜாதகத்தில் எந்த யோகம் இருக்கிறதோ இல்லையோ புதஆதித்ய யோகம் இருந்தாலே அவர்கள் எந்த துறையை தேர்தெடுத்தாலும் சாதிப்பார்கள். இவரின் ஜாதகத்தில் 12-ல் செவ்வாய் மறைந்துவிட்டதை மேலோட்டமாக பார்த்தால், ஒரு குறையாக தெரிந்தாலும், 12-ல் மறைந்த செவ்வாய், அஸ்த நட்சத்திர சாரத்தில் அதாவது ஜீவானாதிபதியான சந்திரன் சாரத்தில் அமர்ந்து குருவின் பார்வையை பெற்று குருமங்கள யோகத்தை அடைந்தது.
இந்த “குருமங்கள யோகம்” என்ன பலன்களை தரும்? எனக் கேட்டால், நில புலன்களை வாரி வழங்கும்.
தனாதிபதி-சப்தமாதிபதி என்கிற 2-7க்குரிய செவ்வாய், குருவின் பார்வையை பெற்றதால், திருமணத்திற்கு பிறகு ஜாதகம் இன்னும் யோகங்களுக்கு பலம் சேர்த்தது. பல உயர்ந்த அந்தஸ்தை அவரின் திருமண வாழ்க்கைக்கு பிறகுதான் தந்திருக்கும்.
பெயர் எண், ஜாதக ரீதியாக சரியாக அமையும்போது, நேரம் சரியில்லை என்றாலும் பெரிய பாதகத்தை உண்டாக்காது. ஏதேனும் வகையில் உதவி கிடைத்து கெட்ட நேரத்தை கடந்து வந்துவிடுவார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu