தென்னைமரம் வெட்ட சென்ற இடத்தில் மரத்துடன் வீழ்ந்த தொழிலாளி

தொழிலாளியின் மறைவு, மரம் ஏறும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேள்விகளை எழுப்புயுள்ளது;

Update: 2025-04-22 06:30 GMT
தென்னைமரம் வெட்ட சென்ற இடத்தில்  மரத்துடன் வீழ்ந்த தொழிலாளி
  • whatsapp icon

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகேயுள்ள கணக்கம்பாளையத்தைச் சேர்ந்த தங்கராஜ் (வயது 55), மரம் ஏறும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று காலை, இவர் கணக்கம்பாளையத்தைச் சேர்ந்த மூர்த்தியுடன் இணைந்து, வளையகாட்டு பகுதியில் உள்ள வெங்கிடுசாமி என்பவரின் தோட்டத்திற்கு தென்னை மரம் வெட்டும் பணிக்காகச் சென்றார்.

பணியின் போது, மரத்தின் உச்சிப் பகுதியை வெட்டும்போது, திடீரென மரம் முறிந்து கீழே விழுந்தது. இதனால், மரத்துடன் தரையில் தவழ்ந்துவிழுந்த தங்கராஜ் கடுமையான காயமடைந்தார். உடனடியாக அவரை கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தும், தீவிர சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக பங்களாபுதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News