குடிநீர் தட்டுப்பாட்டால் பெண்கள் மறியல்

பவானிசாகர் அருகே, குடிநீர் விநியோகத்தில் ஏற்பட்ட இடைஞ்சலால் பெண்கள் நேற்று மறியலில் ஈடுபட்டனர்;

Update: 2025-04-17 04:00 GMT

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகேயுள்ள தொட்டம்பாளையம் பகுதியில், குடிநீர் விநியோகத்தில் ஏற்பட்ட இடைஞ்சலால் பெண்கள் நேற்று மறியலில் ஈடுபட்டனர். பவானிசாகர் அணையிலிருந்து வழங்கப்படும் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ், இந்த பகுதியில் குடிநீர் விநியோகம் நடைபெற்று வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக, முறையான விநியோகம் இல்லாததால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

இது தொடர்பாக பொதுமக்கள் பலமுறை பஞ்சாயத்து நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள், காலி குடங்களை எடுத்து பவானிசாகர் - சத்தியமங்கலம் சாலையில், தொட்டம்பாளையம் ரேடியோ ரூம் பஸ் நிறுத்தம் அருகே தாலைமுனையில் அமர்ந்து மறியல் நடத்தினர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த பவானிசாகர் போலீசார், பெண்களிடம் உரையாடி சமாதானம் செய்து, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு விரைவில் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து பெண்கள் தங்களது மறியலை கைவிட்டனர்.

Tags:    

Similar News